fbpx

தீங்கியல் சட்டம் – பகுதி 1

அறிமுகம்

சொற்களாலோ அல்லது செயல்களாலோ மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்க கூடாது என்ற
மூதுரையே(Alterum non laedere) தீங்கியல் சட்டத்தின் அடிப்படையாகும். தீங்கு என்பது சட்டத்தால் சுமத்தப்பட்ட் கடப்பாட்டை மீறுவதன் மூலம் நபரொருவரின் உரிமையை பாதிக்கும் செயலை குறிக்கும்.

ஆரம்ப காலத்தில் தீங்கியல் சட்டம் தனிமனிதநலனுக்கு விளைவிக்கப்படும் தீங்கான
செயலுக்கு எதிராக பரிகாரத்தை பெற்றுதருவதாகவும் குற்றவியல் சட்டம் சமுதாயநலனுக்கு பங்கம் விளைவிப்பதை கட்டுப்படுத்தலையும் ஒழுங்குபடுத்துகின்றது. நவீனகால தீங்கியல் சட்டத்தில் சமூகத்தின் கொள்கைகள், தார்மீக கோட்பாடுகள் சார்பாக தீர்ப்புக்கள் வெளிவரத்தொடங்கின். இங்கு கொள்கைகள் என்பது நியாயமான நீதியான தன்மை போன்றவற்றை உள்ளடக்கும். அதனை விட சமூக பொருளாதார கொள்கைகளையும் இதற்குள் அ;டக்கமுடியும்.

ஆங்கிலச்சட்டத்தில் தீங்கியலில் கவனயீனத்தை நிரூபிக்க உதவும் எண்ணக்கருவான
“கவனக்கப்பாடு(Duty of Care)”” மற்றும் உரோமன்டச்சுச்சட்டத்தில் பயன்படுத்தப்படும்
எண்ணக்கருவான “தவறு(Wrongfulness)” ஆகியவற்றை தீர்ப்புச்சட்டங்களுடாக நீதிபதிகள்
விரிவுபடுத்தியுள்ளனர். இவை நீதிமன்றத்தில் பயன்படுத்தபடும் கோட்பாடுகளாக
பின்பற்றப்படுவதுடன் இவற்றை முன்னுதாரணமாக கொண்டு வீதிப்பாதுகாப்பு நிதியம், விபத்து
இழப்பீடு, நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில் நியதிச்சட்டங்களும்
உருவாக்கப்பட்டுவருகின்றன(பேனாட் வெசல்ஸ், 2019). இரண்டு சட்டமுறைகளிலும்
கவனயீனத்தை நீருபித்தல் தொடர்பில் வேறுபட்ட அணுகுமுறைகளை பயன்படுத்திய போதும் இறுதி தீர்மானம் பொதுவாக ஒத்ததாகவே காணப்படுகிள்றது.

உரோமன் டச்சுசட்டத்தில் அக்கியுலியன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதற்கு தேவையான் மூலகங்களை நிரூபிப்பதன் மூலம் தீங்கியல் வழக்கில் நிவாரணத்தைப் பெறலாம். குறிப்பாக பிரதிவாதியின் தவறான செயல் அல்லது செய்யாமை, வாதிக்கு பணரீதியானஃசொத்து நட்டம், தவறு தொடர்பில் பிரதிவாதியின் மனஎண்ணம், கவனயீனம், செயற்கோவை போன்றகாரணிகளை நிரூபிக்க வேண்டும்.

ஆங்கிலச்சட்டத்தில் “கவனக்கப்பாடு(Duty of Care)” எனும் கோட்பாட்டை நீதிமன்றங்கள்
கருத்தில் எடுத்து தீங்கியல் வழக்குகளை கையாளுகின்றன. கவனக்கடப்பாட்டை
தீர்மானிக்கும் போது பிரதிவாதி கவனத்துடன் இருக்க வேண்டிய பொறுப்பு, மீறப்பட்ட தன்மை, இழப்பு ஆகிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும். கவனக்கடப்பாட்டை மீறப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால் பொறுப்புடைமையாக்கப்படுவர். அதனை நிறுவுவதற்கு அயலவர் பரீட்சை, 2ம் படிநிலை பரீட்சை, 3ம் படிநிலை பரீட்சை போன்ற கோட்பாடுகள் நீதிமன்ற தீர்ப்புச்சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

தீங்கியல் சட்ட கருத்தேற்புக்கள் கொள்கை விடயங்கள் தொடர்பில் கவனம் செழுத்தப்படும் தன்மை பற்றி உரோமன் டச்சு சட்டம், ஆங்கிலச்சட்டம் போன்றவற்றில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்தன, என ஆராய்வது அவசியமானது. மேலும் நீதிமன்றங்கள் மூலம் உருவாக்கப்பட்ட தீங்கியல் சட்டம் தொடர்பான கோட்பாடுகளில் சமூகஃதார்மீக கொள்கைகள் எவ்வாறு உள்ளடக்கப்பட்டன என்பது தொடர்பில் இங்கு ஆராயப்படுகின்றது.


உரோமன்டச்சுசட்டத்தில் தீங்கியலின்(Delict) தவறு பற்றிய கலந்தாய்வு


உரோமன்டச்சுசட்டத்தில் காணப்படும் தீங்கியல் தவறுகளை பொதுவாக டம்னம் இன்ஜுரியா டாட்டும்(Damnum Injuria Datum), இன்ஜுரியா(Injuria) என இரண்டு வகையாக பிரிக்கலாம்.

டம்னம் இன்ஜுரியா டாட்டும் என்பது பணம்சார் நட்டத்தை ஏற்படுத்தும் ஊறு என்பதை
குறிக்கும். இங்கு டோலுஸ்(Dolus), குல்பா(Culpa) எனும் முக்கியமான கோட்பாடுகள்
இதனுடன் தொடர்பானவை. உளக்கருத்துடன் ஊறு செய்யக்கூடாது என்று முதலாவது
கோட்பாடும் கவனயீனமாக பணரீதியான நட்டத்தை ஏற்படுத்தகூடாது என்று மற்றைய
கோட்பாடும் கூறுகின்றது.


இன்ஜுரியா என்பது உணர்ச்சிகளுக்கு ஏற்படுத்தும் தீங்குகளை குறிக்கும். ஒருவரின்
கௌரவத்தை குறைக்கும்படி செயற்படல், வார்த்தைகளால் அவமரியாதைக்குட்படுத்துதல் போன்ற தவறுகள் இவற்றுள் உள்ளடங்கும். அதற்க பரிகாரமாக அக்ரியோ இன்ஜுரியா வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்.
உரோமன்டச்சுசட்டம் பொதுச்சட்டமாக உள்ள நாடுகளில் அக்குலியன் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டு பொதுவாக டம்னம் இன்ஜுரியா டாட்டும் தொடர்பான தீங்குகளுக்கு நிவாரணம் பெறலாம். நவீன அக்குலியன் வழக்கில் தீங்கு நிகழ்ந்ததை நிரூபிக்க பின்வரும் மூலகங்கள் கவனத்திலெடுக்கப்படும்(புச்சல், 1993);.

  1. தன்னிச்சையான தவறான செயல்ஃசெய்யாமை;
  2. தவறு – கவனயீனம, உளக்கருத்து
  3. செயற்கோவை
  4. பணரீதியான நட்டம்
  5. தகைமை
    மேலே கூறப்பட்ட மூலகங்களில் இருந்து கவனயீனம், உளக்கருத்து அடிப்படையில்
    தன்னிச்சையான செயல், தகைமையுள்ள பிரதிவாதியால் செய்யப்பட்டால் அது தவாறான செயலென்றும் அதன் காரணமாக தீங்கு நிகழ்ந்ததன் விளைவாக பணஃசொத்து நட்டம் ஏற்பட்டால் அக்குலியன் வழக்கில் பரிகாரம் கிடைக்கும்.;

      தன்னிச்சையாக வாதியின் தவறான செயல்

      உரோமன்டச்சுசட்டத்தில் புதிய தீங்கியல் கோட்பாடுகள் தென்னாபிரிக்காவில் அதிகளவில் விருத்தியடைந்து வருகின்றது. கிறிஸ்ரியன் பொன் பாரின் கருத்துப்படி தீங்கியல் சட்டத்தில் மேலதிக பொறுப்புடைமை தவிர்க்கப்பட்டால் மட்டுமே வினைத்திறனான நியாயமான பொறிமுறையாக அமையும் என்றார்.; கடப்பாடுகளை விதிப்பது தொடர்பில் நியாயமான விடயங்கள் சட்ட ஏற்பாடுகளில் காணப்படாமையால் நீதிமன்றங்கள் தமது தீர்ப்புகளினூடாக நியாயமான விதிகளை அறிமுகப்படுத்தின.
      ;பிரதிவாதியின் தவறான செயல் வாதியின் சட்டரீதியான உரிமையை மீறுவதாக இருக்க
      வேண்டும். இது ஒரு செயலின் தன்னிச்சையான செய்கை அல்லது செய்யாமையை
      குறிக்கும்.

      இங்கு பிரதிவாதியின் செயல் தவறானதாகவோஃ சட்டவிரோதமானதாகவோ
      இருக்கும். பிரதிவாதியின் செயல் சமூகத்தால் ஏற்கப்பட்டதா என்ற அடிப்படையில்
      நீதிமன்றம் நோக்கும். இந்த தவறான செயலுக்கான சோதனையில் “சமூகத்தின் தார்மீக
      நம்பிக்கைகள், பெறுமதிகளை கருத்தில் எடுக்கும். இது போனி மோரி பரீட்சை(Boni Mores Test) என அழைக்கப்படும். இது புறவயபரீட்சையாகும் இந்த பரீட்சையில்
      நீதிமன்றம் பின்வரும் விடயங்களை ஆராயும்.

      1.சம்பந்தப்பட்ட தரப்பினரின் நலன்கள்

      2.வாதியின் செயலால் ஏற்பட்ட விளைவுகள்

      3. வழங்கப்படவுள்ள தீர்ப்பு மற்றும் அதன் விளைவுகளை ஆராய்தல்


      இதனடிப்படையில் நீதிமன்றம் வாதி, பிரதிவாதி, சமூகம் ஆகிய தரப்பினரின் நலன்களை
      சமப்படுத்தி தீர்ப்பை வழங்கும். Dudley Lee v Minister of Correctional Services [2012] (CCT 20/12)வழக்கில் நீதிமன்றம் இதே கருத்தை கூறியது. Telematrix (Pty) Ltd v Advertising Standards Authority [2005] SA (459/2004) வழக்கில் விளம்பர அதிகாரசபை இயக்குனர் பொதுமக்களின் நன்மை கருதி குறித்த விளம்பர நிறுவனத்தின் 2 விளம்பரங்களை தடை செய்தமை சடடவிரோதமான செயலல்ல என தீர்க்கப்பட்டது. இந்த வழக்கிலும் சமூகம் மீதான அக்கறை கருத்திலெடுக்கப்பட்டு அதிகாரசபையின் சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

      ஒருசெயலை செய்யவேண்டிய கடப்பாடு இருந்து அதனை செய்யாமல் தவிர்ப்பாராயின்
      அதுவும் தவறான செயலாகவே கருதப்படும். தென்னாபிரிக்காவின் தீங்கியலில்
      முக்கியத்துவம் வாய்ந்த Minister van Polisie v Ewels 1975 (3) SA 590 (A). வழக்கில் தார்மீக கடமைக்கு முரணான செயல்களும் தவறான நடத்தைக்குள் உள்ளடங்கும் என கூறப்பட்டது. இங்கு பொலிஸ் நிலையத்தில் வைத்து கடமையிலில்லாத அலுவலர் நபரொருவதை தாக்கியபோது கடமையிலுள்ள பொலிஸ் அதிகாரி அதனைத்தடுக்காமையால் தவறான செயல் செய்ததாக பொறுப்பாக்கப்பட்டார். Imlar v. Nagoor Pitchai Transporters Ltd. C. A. 195/78(F)வழக்கில் வேலையாள் மூட்டையை லொறியில் ஏற்றும் போது மூட்டை தவறி அவரின் மேல் விழுந்ததால் இறந்தார். இஙக வேலை வழங்கும் நிறுவனம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என நட்டஈடு வழங்குமாறு தீர்க்கப்பட்டது.

      செய்யாமை காரணமாக பொறுப்பு சுமத்தக்கூடிய சர்ந்தப்பங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

      1.முன்னைய நடத்தை கோட்பாடு(A doctrine of Prior Conduct) –ஒரு செயலை
      செய்யாமல் விடுவதால் அதன் காரணமாக ஏற்படும் சகல தீங்குகளுக்கும்
      பொறுப்பாக்கப்படுவர். Joffex Company vs Hopkins கொம்பனி வழக்கில்6 சீமெந்து மேற்றளம் விழுந்து பிரதிவாதியின் கணவன் இறந்தமைக்கு, கட்டட நிர்மானியின் வேலையாட்கள் சரியாக செய்யாமையால் பொறுப்பாக்கப்பட்டது.

      2. ஆபத்தான பொருளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கம் போது முன்னெச்சரிக்கை
      நடவடிக்கை மேற்கொள்ளாமை தவறாகும். Adminstrative Kape vs Proster வழக்கில் பாலம் அமைக்க அமர்த்தப்பட்டிருந்த புகையிரத நிலைய அதிகாரி வெட்டிய பெரிய குழியில் விலங்கு விழுந்து இறந்தமைக்கு பொறுப்பாக்கப்பட்டார்.

      3.பகிரங்க அதிகாரி கடமையை செய்யாமை: Mtati v Minister of Justice 1958 (1) SA 221 (A) வழக்கில் சட்டவிரோத தாக்குதலிலிருந்து சிறையிலுள்ளவரை பாதுகாக்க தவறியமைக்கு
      பொறுப்பாக்கப்பட்டார். பொலிஸ் தாக்குதலிலிருந்து நபரொருவர் தாக்கப்படுவதை
      தடுக்காமைக்கு அதிகாரியொருவர் பொறுப்பாக்கப்பட்hர்.

      4.பொதுச்சட்டஃ நியதிச்சட்ட கடப்பாடு: சட்டத்தினால் குறிக்தொதுக்கப்பட்ட கடப்பாட்டை
      செய்யாமல் தவிர்த்தால் பொறுப்பு சுமத்தப்படும்.

      5.மேலும் தரப்பினர் விசேட உறவுமுறையில் உள்ள போது கடப்பாடுள்ள செயல்களை
      செய்யாமை

      6.ஒப்பந்த கடப்பாடு: ஒருவருக்குபாதுகாப்பு வழங்கவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்
      அதனை செய்யாமை.

      தவறு என்ற எண்ணக்கரு


      உரோமன்டச்சுசட்டத்தில் கவனயீனம் மற்றும் உளக்கருத்தின் அடிப்படையில் தீங்கு
      நிகழமுடியும் என கூறப்பட்டுள்ளது. அதிலும் அதிகளவிலான அக்குலியன் வழக்குகள்
      கவனயீனத்தின் அடிப்படையிலேயை தாக்கல் செய்யப்படுகின்றன.; கவனயீனத்தின்
      அடிப்படையில் தீங்கியல் சட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கீழே விரிவாக
      ஆராயப்படுகின்றது.

      உளக்கருத்து என்பதன் என்பது மனஎண்ணத்துடன் கருதி ;செய்யும் செயல்களை
      குறிக்கின்றது. இங்கு உளக்கருத்து, தவறான செயல் ஆகிய 2 மூலகங்கள்
      தேவைப்படுத்தப்படும். Pelis vs Arnashaal C. S. (S.C.) 678/73 (F) வழக்கில் டோலஸ் என்பது குறித்த செயல்கள் தீங்கு விளைவிக்கும் என அறிந்து வேண்டுமென்றே செய்யபபடும் செயல்கள் என பொருள்படும் என கூறப்பட்டது. Leio vs Smithவழக்கில்; தீக்கோழியை காட்டுப்பறவை என தவறுதலாக எண்ணி வேட்டையாடியமை உளக்கருத்து; இல்லாமையால் குற்றவாளியல்ல என தீர்க்கப்பட்டது. இங்கு தவறான செயல் என்பது சட்டரீதியாக தவறான செயலையே குறிக்கும்.; அதாவது வாதியின் சட்டரீதியான உரிமைகளை பாதிக்கும் செயல்களை பிரதிவாதி செய்திருக்கஃசெய்யாதிருக்க வேண்டும். குறித்த செயல்களை தவிர்க்கும் கடமை இருக்கும் போது அவற்றை செய்தால்ஃசெய்யாதருந்தால் மட்டுமே குற்றமாகும்.

      ஆனால் சட்டரதியான செயலை கூட தீய எண்ணத்துடன் செய்தால் டோலஸ் ஆக
      கருதப்படாது. அது உரிமை துஸ்பிரயோகம்(The Doctrine of Abuse of Rights) எனும் கோட்பாட்டினுள் உள்ளடங்கும்;.

      உரோமன்டச்சுசட்டத்தில் தீங்கை ஏற்படுத்தும் அடுத்த முக்கிய காரணியாக குல்பா
      அமையும். இது தீங்கினைப்புரியும் பிரதிவாதி அதனால் ஏற்படும் விளைவுகளை
      அறிந்திருந்தும் கவனமின்றி செயல்களைச் செய்வதை குறிக்கும்.
      உரோமன் டச்சு சட்டத்தில் கவனயீனத்தை நிரூபிபபதற்கு Kruger v Coetzee 1966 (2) SA 428 (A) வழக்கில்; 3ம் அம்சங்கள் எடுத்துக்கூறப்பட்டன.

      1.நியாயமான மனிதனொருவன்(Reasonable Man- நியாயமான மனிதன் என்பவன் சாதாரன மனிதனுக்கு காணப்படும் சகலகுண அம்சங்களையும் கொண்டிருப்பதுடன் ஒரு சிறந்த பிரஜைக்குரித்தான தகைமைகளையும் உள்ளடக்கியருக்கும் ஒரு கற்பனை உருவத்தை குறிக்கும்) பிரதிவாதியின் இடத்தில் இருக்கும் போது குறித்த விளைவை முன்னரே அறிந்திருப்பாரா?

      2.அத்தகைய ஊறினை தடுக்க ஏதேனும் செயல்களை செய்திருக்கவேண்டுமா?

      3.நியாயமான மனிதன் எவ்வகையான செயல்களை செய்திருப்பார்? அவ்வாறான
      செயல்களை பிரதிவாதி செய்துள்ளாரா?


      மேற்படி முதல் இரண்டு கேள்விகளுக்கும் “ஆம்” என பதில் கிடைக்குமாயின் இங்கு
      கவனயீனம் காணப்படுவதாக கருதமுடியும். 3ம் கேள்வியினடிப்படையில், நியாயமான
      மனிதன் செய்திருக்க கூடிய நடவடிக்கைகள், பிரதிவாதி செய்துள்ள நடவடிக்கைகள்
      ஒப்பிடப்படும். இரண்டிற்குமிடையிலான வேறுபாடுகளின் அடிப்படையில் கவனயீனத்தின் அளவு மதிப்பிடப்படும்.

      மேற்படி பரீட்சை நியாயமான மனிதன் சோதனை(Reasonable Man Test) எனப்படும். இது புறவய சோதனையாகும். இந்த சோதனையை தீர்மானிப்பதில் 2 அம்சங்கள் கவனத்தில் எடுக்கப்படும்.

      1.நியாயமான நடத்தை

      2.நடத்தையின் நியம அளவு(Standard of Behavior)

      இங்கு நியாயமான நடத்தை என்பது சட்ட ரீதியான கடமை மீறலாகும். அது சமூக
      மற்றும் தார்மீக கடமை மீறலாக அமையமுடியாது. குறித்த பாதிப்பு இடம்பெற்றபின்னர்
      நியாயமான மனிதனை அளவு கோலாக கொண்டு நியாயமான நடத்தையை நீதிமன்றங்கள் தீர்மானிக்கும். அதனுடன் ஒப்பிடுகையில் பிரதிவாதியானவர் தனது கடமையை மீறியிருந்தால் அவர் கவனயீனத்திற்கு பொறுப்பாக்கப்படுவார்.
      நடத்தையின் நியம அளவு என்பது வழக்கு நிகழ்வுகளுடன் மாறுபடும். இதனை
      மதிப்பிடுவதற்கு நீதிமன்றுகள் பல விதிகளை காலத்திற்கு காலம் உருவாக்கியுள்ளன.
      கொள்கைகள், சமூகத்திற்கு பயன்படும் தன்மை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இவை தீர்மானிக்கப்பட்டன. இதனை தீர்மானிக்க முன்னறியும் தன்மை, ஊறின்
      பாரதூரமான தன்மை, அதனால் ஏற்பட்ட பாதிப்பின் தன்மை, பிரதிவாதியின் நடத்தையின் பங்கு, சிறவர், முதியவர்கள் பெண்கள் பிரதிவாதியாக உள்ளநிலைமை போன்ற காரணகள் கருத்திலெடுக்கப்படும்.

      முன்னறியும் தன்மை(Foreseeable) தொடர்பில் குறித்த வழக்கு நிகழ்வுகளின்
      அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். குறித்த செயலின் பாதிப்புக்களை ஒரு நியாயமான மனிதன் முன்னரே அறிந்திருக்கின்றானா என்றே பரிசோதிக்கப்படும். இங்கு நியாயமான மனிதன் என்பவன் பிரதிவாதியின் அனுபவம், திறமை என்பவற்றின் அடிப்படையை வைத்தே தீர்மானிக்கப்படும். ஓரு தாதி மற்றும் மருத்துவர் ஆகியோரின் செயல் தொடர்பில் நியாயமான மனிதனை தீர்மானிக்கும் போது அதே தொழிலிலுள்ள நபரின் விசேட குணவியல்புகளை கொண்டதாகவே நியாயமான மனிதன் எண்ணக்கரு நீதிமன்றங்களால் உருவாக்கப்படும்

      அடுத்ததாக ஊறின் பாரதூரமான தன்மை நடத்தையின் நியம அளவை அளவிடுதலில்
      முக்கியமானதாகும். இதன்படி பிரதிவாதியால் விளைவிக்கப்பட்ட ஊறின் அளவு
      நியாயமான மனிதனின் செயல்களுடன் ஒப்பிட்டு தீர்மானிக்கப்படும். Hilder v Associated Portland Cement [1961] 3 All ER 709 வழக்கில் வீதியால் சென்ற வாதி, பிரதிவாதியின் வீதியோடு ஒட்டியுள்ள காணியில் விளையாடிய சிறுவர்களால் வீசப்பட்ட பந்து தாக்கி காயமடைநதமைக்கு பிரதிவாதி பொறுப்பாக்கப்பட்டார. ஆனால் Bolton v Stone [1951] AC 850 வழக்கில் கிரிக்கட் மைதானத்தில் பார்வையாளராக இருந்தவருக்கு பந்து தாக்கியமை கவனயீனம் இல்லை என தீர்க்கப்பட்டது. இந்தவழக்கில் முதல் வழக்குடன் ஒப்பிடுகையில் ஊறின் அளவு குறைவு என்பதால் கவனயீனமாக கருதப்படவில்லை. அத்தடன் ஊறினால் விளைவிக்கப்பட்ட பாதிப்பின் தன்மையும் கவனத்திலெடுக்கப்படும்.

      அடுத்ததாக பிரதிவாதியின் நடத்தையின் பங்கும் நடத்தையின் நியம அளவை
      அளவிடுதலில் முக்கியமானதாகும். இதன்படி ஊறினை குறைக்க பிரதிவாதியினால்
      மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கவனத்திலெடுக்கப்பட்டு கவனயீனத்தின் கடுமை
      தணிக்கப்படலாம். Latimer v AEC [1953] AC 643 வழக்கில் வழுக்கும் நிலையில் காணப்பட்ட தொழிற்சாலை தரையில் விழுந்து வாதி காயமடைந்தார். வழுக்கும் தன்மையை குறைக்க தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கையெடுத்ததாக வாதிட்ட பேர்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதல்ல என கூறி பொறுப்பாக்கப்பட்டனர்.
      உரோமன்டச்சுச்சட்டத்த்pலும் ஆங்கிலச்சட்டத்திலும் நடத்தையின் நியம அளவை(Standard of Behavior) அளவிடுதல் ஒரேமாதிரியாக இருப்பதால் மேலே ஆங்கில வழக்கு உதாரணங்கள் குறிப்பிடப்பட்டன.

      மேலும் பென்கள், முதியவர்கள் சிறுவர் தொடர்பில் நியாயமான மனிதன் சோதனை
      மட்டுப்பாடுகளுக்குட்பட்டது. இங்கு அதே பால், அதே வயதை சேர்ந்தவர்களையே
      நியாயமான மனிதனாக கணிப்பிட்டு ஒப்பிபடப்படும்.

      செயற்கோவை(Causation)

      பிரதிவாதியின் செயலுக்கும் வாதிக்கு ஏற்பட்ட சேதத்திற்கும் இடையில் காணப்படும்
      தொடர்பே செயற்கோவை எனப்படும். அக்குலியன் வழக்கில் பிரதிவாதி மீதான
      பொறுப்புடைமை சுமத்தப்பட 2 வினாக்கள் எழும்.

      1.வாதியின் சேதத்திற்கு பிரதிவாதியின் கவனயீனம் காரணமா?

      2.ஆம் எனின், எந்த எல்லை வரையான விளைவுகளுக்கு பிரதிவாதி
      பொறுப்புப்பாக்கப்படுவார்?

      இதனை நிறுவுவதற்கு “But For” பரீட்சை நடாத்தப்படும். பிரதிவாதியின் செயல்
      இல்லையாயின் தீங்கு நிகழ்ந்திருக்காது என தாபிக்க முடிந்தால் அச்செயலே தீங்கிற்கான
      காரணம் என இப்பரீட்சை மூலம் அறியப்படும். Barnett v Chelsea & Kensington Hospital [1969] 1 QB 428 வழக்கில் நஞ்சை உட்கொண்டவருக்கு வைத்தியர் சிகி;ட்சையளிக்க மறுத்தமையால் இறப்பு நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனினும் சிகிட்சையளித்திருப்பினும் அவர் இறந்திருக்கக்கூடிய கூடிய ஆபத்தான நிலையில் இருந்ததால் பொறுப்பாக்கப்படவில்லை. ஒரே நேரத்தில் நிகழும் விளைவுக்குரிய வெவ்வேறு காரணிகள் தொடர்பில் இவ்விதி பொருந்தாது.

      மேலும் ஒரு கவனயீனமான செயல் அல்லது செய்யாமையின் பின்னர் இன்னமொரு தீங்கு
      ஏற்பட்டிருப்பின் அது இடைமறிக்கும் காரணம் எனப்படும். இது சங்கிலித்தொடரை
      முறித்தால் பிரதிவாதி தனது செயல்களுக்கு மட்டும் பொறுப்பாவர். இவ்வாறான
      நிலைமைகளில் நீதிபதிகள் தமது தற்றுணிவை அதிகளவில் பிரயோகிக்க
      வேண்டியள்ளது. மேலும் அதனடிப்படையில் பிரதிவாதியின் சேதத்திற்கான
      பொறுப்புடைமையை தீர்மானிக்க நேரடிவிiவு விதி, முன்னறிவு விதி போன்றவற்றை
      நீதிமன்றுகள் அறிமுகப்படுத்தியுள்ளன.

      இவற்றுக்கு மேலதிகமாக தற்போது தென்னாபிரிக்க நீதிமன்றங்கள் முன்னேற்றகரமான
      விதியை இது தொடர்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. நியாயமான தன்மை, நீதி போன்ற
      கொள்கைகளை உள்ளடக்கிய நெகிழ்வு தன்மையான சோதனையை (Elastic Test/Flexible Test) பாவித்து வருகின்றன. Smith v Abrahams வழக்கில் பிரதிவாதியின் செயல் தொடர்பில்
      சேய்மை விளைவை மதிப்பிடும் போது மேற்கூறப்பட்ட கொள்கைகளை
      கருத்திலெடுக்கவேண்டும் என கூறியது.


      பணரீதியான நட்டம்


      அக்குலியன் வழக்கு தொடர்வதற்கு வாதி பணரீதியான இழப்பு ஏற்பட்டதை எண்பிக்க
      வேண்டும். இங்கு பணரீதியான இழப்பு என்பது பணத்தால் அளவிடக்கூடிய சேதங்களையும் உள்ளடக்கும். பண இழப்பு நேரடி நட்டம், மறைமுக நட்டம் என இருவகைகளில் வேறுபடுத்தப்படும். Gafoor vs Wilson 1990 1 SLR 142 வழக்கில் பிரதிவாதியின் கவனயீனத்தால் வாதியின் மகன் இறந்தமைக்கு, மகன் மாதாநதம் தாய்க்கு கொடுக்கும் பணததொகையை செழுத்தவேண்டும் என தீர்க்கப்பட்டது.

      தகைமை

      சித்தசுவாதீனமுடையோர், சிறுவர்கள் மற்றும் மனதளவில் முதிர்ச்சியற்றோர்,
      போதையூட்டப்பட்டவர்களுக்கெதிராக அக்குலியன் வழக்கு தொடரமுடியாது.
      உரோமன்டச்சுசட்டத்தில் தீங்குகளுக்கு பாதுகாப்பாக சம்மதம்,தற்பாதுகாப்பு,அவசியத்தன்மை போன்றவற்றை பிரதிவாதிகள் எதிர்வாதமாக வைத்து பொறுப்படைமையின் கடுமையை குறைக்கலாம்.

      தொடரும்

      Back to top button