fbpx

நியதிச்சட்டங்களில் கடந்தகால பயன் கொண்டவற்றின் ஏற்புடமை

பொதுவாக நியதிச்சட்டங்கள் அவற்றின் வலுக்கொள்ளும் காலம் தெளிவாக குறிப்பிடாத பட்சத்தில் அவை எதிர்கால பயன் (Prospective) கொண்டவை என ஊகிக்கப்படும். இவ் ஊகம் ஜஸ்ரினியன் தொகுப்பில் காணப்படும் சட்ட மூதுரையிலிருந்து உருவானதாகும்.

“சட்டம் என்பது எதிர்கால செயல்களுக்கு உருக்கொடுக்க வல்லது அன்றி பின்னோக்கி சென்று கடந்தகால செயல்களுக்கு அல்ல.” எனவே இவ் ஊகமானது ஆங்கில சட்டத்திலும் நன்கு வேரூன்றிய கோட்பாடாகவே காணப்படுகின்றது. நியதிச்சட்ட பொருள்கோடல் என்ற நூலில் மக்ஸ்வெல் அவர்கள் இதனை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார்.

ஆங்கில சட்டத்தின் அடிப்படை விதி யாதெனில் நியதிச்சட்டத்தில் மிக தெளிவான சொற்தொடரால் குறிப்பிடாத பட்சத்தில் கடந்தகால பயன் கொண்ட நியதிச்சட்டம் என்று எதுவும் ஊகிக்கப்படமாட்டாது. Landgraf v. USI Film Products என்ற அமெரிக்க வழக்கிலும் இது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் இவ் ஊகம் ஏற்கப்பட்டுள்ளது.

இலங்கையினை பொறுத்தவரையில் அரசியலமைப்பின் உறுப்புரை 75 இன் பிரகாரம் பாரளுமன்றம் கடந்தகாலத்தில் பயன் கொடுக்கும் சட்டம் உட்பட எந்த சட்டத்தினையும் உருவாக்க தத்துவம் கொண்டுள்ளது.

அதேநேரம் உறுப்புரை 80.1 இன் பிரகாரம் சட்டமூலம் சட்டமான பின்னர் அதனை கேள்விக்குட்படுத்த முடியாது. அதிலிருந்து அது சட்டமாகும் எனினும் கடந்தகாலத்திற்கு பயன்கொடுக்க வேண்டுமாயின் சட்டமூலத்தில் தெளிவாக எத்திகதியிலிருந்து அது செயற்படத் தொடங்கும் என்பது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பொருள்கோடல் கட்டளைச்சட்டம் பிரிவு 6(3) இதனை தெளிவாக குறிப்பிடுகின்றது. Appuhamy v. Brumpy,16N.L.R.59, Akilandanayaki v. Sothinagaratnam, 53 N.L.R. 385. The Queen vs (1) Fernando (2) Carolis 61 N.L.R. 395, United Industrial, Local Governmentand General Workers Union vs. Independent Newspapers Ltd. 75 N.L.R. 241 -at 243 என்ற வழக்குகளில் இதனை தெளிவாக ஆராயப்பட்டுள்ளது.

Demel v. Demel என்ற வழக்கில் கடந்தகால செயல்கள் அல்லது ஒருவருக்கு சொந்தமான உரிமைகளில் ஏதேனும் பாரபட்சம் ஏற்படுவதாக நியதிசட்டம் கடந்தகால பயன் கொடுக்கும் போது கடந்தகால பயனுக்கு எதிரான விதி பயன்படுத்தப்படும்.

இவற்றிலிருந்து தெளிவாவது யாதெனில் சட்டவாக்கம் கடந்தகாலத்திற்கு பயன்கொடுக்கும் சட்டத்தை உருவாக்கினாலும் அதில் அதனது செயற்படத்தொடங்கும் காலம் தெளிவாக குறிப்பிட பட்டிருக்க வேண்டும் இல்லாவிடில் அதற்கு எதிரான விதி ஊகிக்கப்படும்.

சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்

    Back to top button