fbpx

வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அச்சப்பட வேண்டாம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

அனைத்து அரச வைத்தியசாலைகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும் நோயாளர்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சுக்கு இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், மருந்துகளின் தரம் மற்றும் தன்மை குறித்து நோயாளிகளுக்கு உறுதியளித்துள்ளதாகவும், வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கு அச்சப்பட வேண்டாம் எனவும் சுகாதார அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
மேலும், தாதியர்கள், வைத்திய ஊழியர்கள் நோயாளிகளின் உயிரை ஒருபோதும் ஆபத்தில் ஆழ்த்தவில்லை என்றும், அண்மைய நாட்களில் ஊடகங்கள் தெரிவித்தது போல் எந்தவொரு நோயாளியின் உயிருக்கும் வேண்டுமென்றே ஆபத்தினை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சுகாதார அமைச்சின் தலைமையிலான வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் ஒவ்வொரு நோயாளியின் உயிரையும் காக்க எப்போதும் உழைத்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவசர நிலை ஏற்பட்டால், நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Back to top button