fbpx

நம்பரை சேவ் பண்ணவே வேணாம்..அப்படியே மெசேஜ் அனுப்பலாம்! வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்! எப்படி செய்வது?

வாட்ஸ்அப்பில் ஏதாவது ஒரு புதிய எண்ணுக்கு மெசேஜ் செய்வதற்காக, இனி அந்த எண்ணை காண்டாக்ட் லிஸ்ட்டில் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆண்ட்ராய்டோ, ஆப்பிள் போனோ தெரியாத நபர்களின் எண்களை இனி சேவ் செய்யாமலேயே நேரடியாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ய முடியும்.

வாட்ஸ்அப் தொடங்கப்பட்டது முதல் அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. முதலில் மெசேஜிங் தளமாக இருந்த வாட்ஸ் அப், குரூப் சாட், வாய்ஸ் கால், வீடியோ கால், யுபிஐ பேமெண்ட் வசதி என அடுத்தடுத்த அப்டேட்களால் பயனர்களை ஈர்த்து, இன்று உலகின் முன்னணி மெசஞ்சர் தளமாக உள்ளது.

வாட்ஸ் அப் பயனர்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் கூட நாம் வாட்ஸ் அப் மூலமாக மெசேஜ் அனுப்ப முடியும், சாட் செய்ய முடியும்.

முன்னதாக, யாருக்காவது வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், அவரது மொபைல் எண்ணை சேமிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. தற்போது ஒருவரின் நம்பரை சேவ் செய்யாமலேயே வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் செய்யலாம். ஏற்கனவே பல்வேறு தேர்டு பார்ட்டி ஆப்ஸ் மூலமாக யூசர்கள் தங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் நம்பரை சேர்க்காமலேயே செய்திகளை அனுப்ப முடியும். ஆனால் அந்த செயலிகள் நமது போனுக்கு பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துவதோடு, நமது டேட்டாவையும் திருடக்கூடும். இப்போது வாட்ஸ் அப்பே நம்பரை சேமிக்காமல் சாட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

எண்ணை சேமிக்காமல் நேரடியாக மெசேஜ் செய்வது எப்படி?:

1. வாட்ஸ்அப் மெசஞ்சரை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

2. வலது புறம் கீழே இருக்கும் நியூ சாட் பட்டனை ஓபன் செய்யுங்கள்.

3. மேலே லென்ஸ் வடிவில் உள்ள பட்டனை க்ளிக் செய்து தாங்கள் மெசேஜ் செய்ய விரும்பும் எண்ணை அழுத்த வேண்டும்.

4. அந்த எண்ணுக்கு அருகில் சாட் என ஆப்ஷன் வரும்.

5. அதை கிளிக் செய்தால் போதும், அந்த எண்ணுக்கு நேரடியாக மெசேஜ் செய்யலாம்.

Back to top button