fbpx

பூமியை நோக்கி வரும் பேரழிவு! ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது புதிய கண்டு பிடிப்புகள் அறிவிப்புகளை வெளிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பூமிக்கு வரும் ஏதாவது ஆபத்துகள் குறித்தும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பூமிக்கு வரும் ஒரு ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் இருந்து அவ்வப்போது விண் கற்கள் பூமியை நோக்கி வருவது வழக்கமானது தான். அதில் பெரும்பாலும் சிறியதாக இருப்பதால் விண்வெளியிலேயே எரிந்து விடும்.ஆனால் உருவத்தில் பெரிய கற்கள் பூமியில் வந்து விழுவதும் அவ்வப்போது நடந்துள்ளது.

அந்த வகையில் தற்போது மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் யூ.என் 5 எனப் பெயரிடப்பட்ட விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை 10:30 மணிக்கு பூமியின் புவி வட்டப் பாதையை 8 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விண்கல்லை விண்வெளியில் சுற்றி திரியும் விண்கற்கள் மீது மோதி திசை திருப்பும் முயற்ச்சியில் நாசா ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த கல் நூறடி விட்டம் கொண்டதாக உள்ளது என்றும் அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Back to top button