fbpx

இந்தியாவை மிரட்டும் BF.7 கொரோனா!

மீண்டும் உலகில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகளால், பதற்றம் எழுந்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு சுனாமி போல் பரவி நிலைமை கட்டுப்பாட்டை மீறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள் மற்றும் இதர உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் சீனா திண்றிவருவதாக கூறப்படுகின்றது.

சீனா மட்டுமின்றி, அமெரிக்கா, பிரேசில், தென் கொரியா, ஜப்பான் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலும் தொற்று பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு, இந்திய சுகாதார அமைச்சகம் ஒரு முக்கியமான கூட்டத்தை அழைத்தது.அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தியாவில் நான்கு பேருக்கு Omicron வகையின் BF.7 மாறுபாடு தொற்று ஏற்பாடுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய அதே மாறுபாடு இது ஆகும். கோவிட்-19 தொடர்ந்து பிறழ்வு ஆகி வரும் நிலையில், அதன் அறிகுறிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

பல அறிகுறிகளை மக்கள் சாதாரணமாக கருதி புறக்கணிக்கிறார்கள். ஆனால் அவை கோவிட் நோயாக இருக்கலாம் என அறிவுறுத்தப்பட்ட்டுள்ளது.

இது குறித்து பிரிட்டனின் சுகாதார ஆய்வு செயலியான ZOE என்ற செயலியில், பாதிக்கப்பட்டவர்கள் என்ன விதமான அறிகுறிகளை உணர்ந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்காமால் உடனே பரிசோதனை செய்து கொள்வதுடன், மருத்துவரை ஆலோசிக்குமறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய BF.7 கொரோனாவின் அறிகுறிகள்: –
பசியிழப்பு ,வயிற்றுப்போக்கு, தொடர் இருமல்,மூச்சு திணறல் , வாசனை களை உணர முடியாத நிலை, நடுக்கம் மற்றும் காய்ச்சல், அதிக களைப்பு ,அதிக காய்ச்சல், தசை வலி, சளியுடன் கூடிய இருமல், தலைவலி , சளி இல்லாத இருமல் , மூக்கு ஒழுகுதல், மூக்கு அடைப்பு, தொண்டை வலி , தும்மல் என்பவை அறிகுறிகளாக கூறப்படுகின்றது.

மேலும் இது குறித்து ZOE செயலி அளித்த தகவல்களில், ‘சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வாசனை இழப்பு ஆகியவை கோவிட்-ன் BF-7 மாறுபாட்டின் பொதுவான அறிகுறிகளாகும்.

இவை மற்ற வகைகளிலும் பொதுவான அறிகுறிகளாகும். இது கொரோனா வைரஸின் ஒரு முக்கிய அறிகுறியாகும், ஆனால் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 16 சதவிகிதம் மட்டுமே அதை அனுபவிக்கிறார்கள்’ என கூறப்பட்டுள்ளது.

அறிகுறிகள் தோன்றினால் என்ன செய்ய வேண்டும்?
தொற்று பாதிக்கப்பட்ட சிலர் ஐந்து நாட்களுக்குப் பிறகும் மற்றவர்களுக்கு வியாதியை பரப்புவதில்லை. சிலர் தொற்று ஏற்பட்ட 10 நாட்களுக்குப் பிறகும் தொற்று நோயை பரப்பலாம்.

எனவே அறிகுறிகளை உணர்ந்தவர்கள் 5 நாட்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும், இவர்கள் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளை 10 நாட்களுக்கு சந்திக்கக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

BF.7 என்பது ஓமிக்ரான் தொற்றுவகையான BA.5இன் துணை வகையாகும். மேலும் இது அதிக அளவில் பரவக்கூடியது.

மேலும் தனிமையில் இருப்போர் மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் கூட நோய்த்தொற்று அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் அதிக திறன் கொண்டதாக இருப்பதால் வலுவான தொற்றுத் திறனைக் கொண்டுள்ளது என BF.7 குறித்து வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Back to top button