fbpx

என்னா தில்லு பாருயா..! வளர்ப்பு பிராணியை காப்பாற்ற கரடியை அடித்து விரட்டிய வீரமங்கை

அமெரிக்காவில் நாயைக் காப்பாற்ற பெண் ஒருவர் கரடியை அடித்து விரட்டினார்.

உட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வனப்பகுதி ஒட்டி தனது வீட்டினைக் கட்டியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் வனத்திலிருந்து குட்டிகளுடன் வெளியேறிய பழுப்புக் கரடி ஒன்று அந்தப் பெண்ணின் வீட்டுச்சுற்றுச்சுவரில் ஏறியது. இதனைக் கண்ட அந்தப் பெண் வளர்த்த நாய் கரடியை விரட்ட முயன்றது.

ஆனால் கரடியோ குட்டியுடன் இருந்ததால் நாயைத் தாக்க முயன்றது. இதனைக் கண்ட அந்தப் பெண் ஓடிச் சென்று கரடியைப் பிடித்து சுற்றுச் சுவரில் இருந்து தள்ளி விட்டார். இதனை சற்றும் எதிர்பாராத கரடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button