fbpx

கிரீஸில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

கிரீஸ் நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்வத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் மூண்டது.

அங்கு இம்மாத முற்பகுதியில் சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விரைவில் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முறை கொண்டு வரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின்முன் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தேசிய கொடிகளை உயர்த்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் போலீசாரும், பொதுமக்களும் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து பொது மக்களை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் போலீசார் கலைத்தனர்.   

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button