fbpx

செவ்வாய் கிரகத்தில் உயிர் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள்? ஆய்வை தொடங்கவுள்ள நாசாவின் பெர்சிவெரன்ஸ் ரோவர்!

செவ்வாய் கிரகத்தில் உயிர் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள்? ஆய்வை தொடங்கவுள்ள நாசாவின் பெர்சிவெரன்ஸ் ரோவர்

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பியுள்ள பெர்சிவெரன்ஸ் (perseverance) ரோவர், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அங்கு உயிர் படிமங்கள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தயாராகி உள்ளது.

செவ்வாய் கிரகத்தின் ஜெசீரோ (Jezero) பள்ளத்தில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வந்து, அதன் மூலம் அங்கு நீர் இருந்ததா என்று ஆராயப்படும் என்று கூறியுள்ள நாசா, கரியமில வாயுவிலிருந்து ஆக்சிஜனை பிரித்து எடுக்கும் மோக்ஸி (Moxie) என்றழைக்கப்படும் புதிய ஆய்வையும் பெர்சிவெரன்ஸ் (perseverance) ரோவர் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு அங்கேயே ஆக்சிஜன் வழங்கும் நோக்கில் இந்த புதிய ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button