fbpx

கைத்தொழில் சட்டம்: இலங்கையின்‌ தொழிலில் ஈடுபடும் பெண்களின் மகப்பேற்று பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் சட்டங்கள் – பகுதி 2

2. பாலூட்டும் கால இடைவெளி


உலக சுகாதார தாபனத்தின் பரிந்துரைகளின் படி தாயப்;பாலூட்டுதல் மூலம் தாய்க்கும் சேய்க்கும் அதிகளவு நன்மைகள் கிடைப்பதால் இந்த நடைமுறையை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் சட்டவாக்கங்களில் உள்ளடக்கப்படவேண்டும் என கூறுகின்றது. மேலும் 103ம் சமவாயத்தின் உறுப்புரை 5 படி குழந்தைக்கு தாய்பாலூட்டும் காலப்பகுதி தீர்மானிக்கப்பட வேண்டுமென்றும் உறுப்புரை 5(2) படி குறித்த காலப்பகுதி வேலை நேரமாக கணிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்றம் கூறுகின்றது.


அதனடிப்படையில் திருத்தப்பட்டவாறான மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டம், திருத்தப்படடவாறான கடைகள் மற்றம் அலுவலக ஊழியர் சட்டம் போன்றவற்றில் ஒரேமாதிரியான ஏற்பாடுகள்(SOE S18A, MBO 12B) காணப்படுகின்றன. அதற்கமைய இரண்டு தாய்ப்பாலூட்டும் கால இடைவெளிகள் காணப்படவேண்டும். குழந்தைப்பராமரிப்பு நிலையம் வழங்கப்பட்டுள்ளபோது அது 30 நிமிட இடைவவளியாகவும், மேற்படி வசதி வழங்கப்படாதவிடத்து 1 மணித்தியாலமாகவும் இருக்கும்.


மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 12A1 படி விதந்துரைக்கப்பட்ட எண்ணிக்கiயான பெண் தொழிலாளர்கள் காணப்படுமிடது;து 5 வயது வரையான பிள்ளைகளுக்காக குழந்தைப்பராமரிப்பு நிலையம் நிறுவப்படவேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. எனினும் ஏனைய சட்டங்களில் இந்த ஏற்பாடு காணப்படவில்லை.


தாபனவிதிக்கோவையில் குழந்தைக்கு 6 மாதம் வரை 1 மணித்தியாலம் பாலூட்டும்; இடைவெளியாக இருக்கும (E-Code S18:7);. அதன்படி வேலையிலிருந்து 1 மணித்தியாலம் முன்னராக வீடு திரும்பமுடியும். பல்கலைக்கழக ஊழியர்களுக்கு குழந்தையின் 1 வயது வரை 1மணித்தியால அளவைக்கொண்ட 2 பாலூட்டும் காலஇடைவெளி கிடைக்கும்.


தனியார் தொழில்களுக்கு பொருந்தும் இருசட்டங்களிலும் பாலூட்டும் காலம் வரை 2 மணித்தியாலம் வரை பாலூட்டும் கால இடைவெளிகிடைக்கும். எனினும் அரச ஊழியர்களுக்கு பிள்ளையின் 6 மாதங்கள் வரை 1 மணித்தியால விடுமுறையே கிடைக்கும். அதிலும் பல்கலைக்கழக அரச ஊழியர்களுக்கு பிள்ளiயின் 1 வரை வரை இந்த சலுகை கிடைக்கும்.


சட்டத்தில் குறிப்பிடத்தக்களவு ஏற்பாடுகள் காணப்பட்டாலும்; சில நடைமுறைச் சிக்கல்களும்; காணப்படுகின்றன. வேலைத்தளத்திலிருந்து தூரபிரதேசத்தில் வசிப்பவர்கள் இக்கால இடைவெளியை சரியாக பயன்படுத்தமுடியாத நிலையில் காணப்படுவர்.

3. தாய் சேயின் உடல்நலம்


103ம் இலக்க சாசனததின் உறுப்புரை 3(2) படி பிறப்பு நிகழந்;து குறைந்தது 6 வாரங்கள் வரை கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும். எனினும் மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டம்(MBO S2), தாபனவிதிக்கோவை(E-Code S18:2), பல்கலைக்கழக சுற்று நிரூபம் போன்றவற்றில் இந்த உரிமை 4 வாரங்கள் வரையே வழங்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் அலுவலக ஊழியர் சட்டத்தில் இவை தொடர்பாக ஏற்பாடுகள் காணப்படவில்லை.


மேலும் மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டம், கடைகள் மற்றும் அலுவலக ஊழியர் சட்டத்தில் தாயின் அல்லது சேயின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேலைகள் பிரசவத்திற்கு 3 மாதத்திலிருந்து வழங்கப்படக்கூடாது என வலியுறுத்துகின்றது[SOA S18D(1), MBO S10B(1)]. அந்த உரிமை பிரசவத்தின் பின்னர் 3 மாதங்கள் வரையும் நீட்டிக்;கப்படுகின்றது[SOA S18D(2), MBO S10B(2)].


மேற்படி ஏற்பாடுகளை ஒத்த ஏற்பாடுகள் தாபனவிதிக்கோவை, பல்கலைக்கழக சுற்றுநிரூபத்தில்; உள்ளடக்கப்படவில்லை. எனினும் தாபனவிதிக்கோவை பிரிவு 18:6 படி பிரசவத்திற்கு முன்னராக உள்ள 5 மாதங்கள் வேலைக்கு அரை மணித்தியாலம் பிந்திவருவதற்கும், அரைமணித்தியாலம் முந்தி வேலையை விட்டுநீங்குவதற்கான உரிமையை வழங்குகின்றது.


சட்ட ஏற்பாடுகளில் உள்ள பிரசவம் மூலம் உயிருள்ள பிறப்பு நிகழாதவிடத்து 6 வாரகாலம் வரை விடுமுறை வழங்கப்படுதல் தாயின் நலனை கருதியதாகும்.

4.தொழில் பாதுகாப்பு


103ம் இலக்கசாசனததின் உறுப்புரை 6 படி பிரசவவிடுமுறை காரணமாக வேலைக்கு சமூகமளிக்காத நிலையில் வேலை நீக்கம் பற்றிய அறிவித்தலோ, வேலை நீக்கம் தொடர்பாக காலக்கெடுவை விதிக்கும் அறிவித்தலோ வழங்ககூடாது என்றும் இதனை மீறுதல் சட்டவிரோதம் என கூறப்பட்டுள்ளது.


இதனை ஒத்ததாக மகப்பேற்று பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் பிரிவு 10ல் பிரசவவிடுமுறை காவத்தில் வேலைநீக்க அறிவித்தல் வழங்குதல் தடுக்கப்பட்டுள்ளது. இதே ஏற்பாடு கடைகள் மற்றம் அலுவலக தொழிலாளர் சட்டத்தில் காணப்படுகின்றது[SOA S18F]

மேலும் மேற்படி இரு சட்டங்களிலும் கர்ப்பம், பிரசவம், அதன் விளைவால் ஏற்படும் நோய்கள் போன்ற காரணங்களால் வேலை நீக்கம் செய்யப்படுதலும் தடுக்கப்பட்டுள்ளது.[SOA S10A(1), MBO S18E(2)] மேற்குறித்த காரணங்களின் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்படவில்லை என்பதை நிரூபிக்கும் தராதரம் தொழில் தருனரையே சாரும்[SOA S10A(1), MBO S18E(2)].


எனினும் தாபன விதிக்கோவையில் இது தொடர்பான ஏற்பாடுகள் காணப்படவில்லை. இருந்தபோதிலும் அரைச்சம்பள, சம்பளமற்ற விடுமுறை பெறப்படுமிடத்து அது சம்பள ஏற்றம், பதவியுயர்வு, ஓய்வூதியம் போன்றவற்றை பாதிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.[E-Code 18:9]இது தொடர்பாக 2013ம் ஆண்டின் 10ம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றுநிரூபத்தலும் ஏற்பாடு உண்டு.



இரு சட்டங்களிலும் 2018 திருத்தத்திற்கு பின்னராக ஏற்பட்ட மாற்றங்கள்

மகப்பேற்று பாதுகாப்பு கட்டளைச்சட்டம், கடைகள் மற்றும் அலுவலக தொழிலாளர் சட்டம் போன்றவற்றில் 2018ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்[Maternity Benefits (Amendment) Act, No.15 of 2018 and Shop and Office Employees (Regulation of Employment and Remuneration) Act, No.14 of 2018] மூலம் சட்டங்களில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டன. மேலும் மேற்படி இரு சட்டங்களும் மகப்பேற்று நன்மைகள் தொடர்பில் ஒத்ததன்மையடையதாக மாற்றப்பட்டது. 1985 ல் இருந்து வரும் குறைபாடுகள் களையப்பட்டமையால் மேற்படி திருத்தங்கள் மூலம் மகப்பேற்று நன்மைகள் தொடர்பான நோக்கெல்லை பரந்துபட்டதாக அமைந்ததால் ஒப்பீட்டளவில் அதிகளவு நன்மைகள் ஏற்பட்டன. இத்திருத்தங்கள் மூலம் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட சாதக பாதக அம்சங்கள் பற்றி கீழே மதிப்பீடு செயயப்படுகின்றது.


103ம் இலக்க சமவாயத்தின் உறுப்புரை 3 ற்கமைவாக பெண்களின் பிரசவ விடுமுறைக்காலம் குறைந்தது 12 வாரமாக இருப்பதுடன் பிள்ளைகளின் எண்ணிக்கை தொடர்பில் கட்டுப்பாடுகள் காணப்படவில்;லை. மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தில் 2018 ஆண்டின் திருத்தத்திற்கு முன்னர்வரை ;; பிரிவு 3 ன் படி பிரசவத்திற்கு 2 வாரத்திற்கு முன்னரும் பிரசவத்தின் பின் 10 வாரங்கள் வரையும் முதல் 2 பிள்ளைகளுக்கு மட்டுமே பிரசவவிடுமுறை பெறமுடியும். ஏனைய பிள்ளைகளுக்கு 6 வாரம் வரையான விடுமுறை காலமே அனுமதிக்கப்பட்டது. அது தாய் சேய் உடல்நலத்தை பேணுவதில் சிக்கல்நிலையை ஏற்படுத்தியது.


எனினும் இது 2018 திருத்தத்தின் பின்; பிரிவு 3(1)ல் பிரசவ விடுமுறை சகல பிள்ளைகளின் பொருட்டும் பெறமுடியும். இது 103ம் இலக்க சமவாய ஏற்பாடுகளுடன் பொருந்துவதாக உள்ளது. திருத்தப்பட்டவாறான கடை மற்றும் அலுவலக ஊழியர் கட்டத்தின் பிரிவு 18B(2) இலும் இதே ஏற்பாடு காணப்படுகின்றது.


மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தில் பிரசவவிடுமுறை காலப்பகுதிக்குள் வேலையாளுக்கு உரித்தான ஏனைய விடுமுறைகளும் சேர்த்து கணிக்கப்படாது. 2018 திருத்தத்திற்கு முன்னர் விடுமுறை நாட்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது. கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டத்தில் 2018ம் ஆண்டின் திருத்தத்திற்கு முன்னரே இந்த ஏற்பாடு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.;


கடைகள் மற்றம் அலுவலக தொழிலாளர் சட்டத்தில் முன்னராக தாய்மாருக்கு பாலூட்டும் காலஇடைவெளி வழங்கப்படவில்லை. 2018 ஆண்னெ; திருத்தத்தின் மூலம் 2 பாலூட்டும் கால இடைவெளி சலுகை வழங்கப்பட்டது.

குழந்தைப்பராமரிப்பு நிலையம் வழங்கப்பட்டுள்ளபோது அது 30 நிமிட இடைவெளியாகவும், மேற்படி வசதி வழங்கப்படாதவிடத்து 1 மணித்தியாலமாகவும் இருக்கும். மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தில் பாலூட்டும்; கால இடைவெளி சலுகை முன்னரே காணப்பட்டது. மேலும் மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தில்[MBO S12A(1)]; குறித்தளவு பெண் தொழிலாளர்கள் காணப்படுமிடத்து குழந்தைப்பராமரிப்பு நிலையம் நிறுவப்படவேண்டும் என்ற ஏற்பாடு 2018 ற்கு முன்னரே காணப்படுகின்றது. எனினும் கடைகள் மற்றம் அலுவலக தொழிலாளர் சட்ட திருத்தத்தில் இது உள்ளடக்கடபடவில்லை.


2018 ஆண்டு திருத்தங்களின் பின்னரும் விடுமுறை காலப்பகுதி, பாலாட்டும் கால இடைவெளி தந்தமை விடுப்;பு தொடர்பில் தனியார் மற்றும்; அரசதுறை ஊழியர்களிடையே வேறுபாடு காணப்படுகின்றது. குறிப்பாக அரச ஊழியர்கள் அதிகளவு மகப்பேற்று நன்மைகளை பெறுகின்றனர்.


மகப்பேற்று பாதுகாப்பு கட்டளைச்சட்டம் வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், தனிப்பட்ட முறையில் வீடுகளில் வேலை செய்பவர்கள் உட்பட அமைய வேலையாட்களையும் வெளிப்படையாக மகப்பேற்று நன்மைகளை பெறுவதிலிருந்து தடுக்கின்றது. எனினும் கடைகள் மற்றம் அலுவலக தொழிலாளர் சட்டத்தால்; ஆளப்படும் சகல பெண்களுக்கும்; இந்த நன்மைகளும் உரித்தாகின்றன. மகப்பேற்று பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின்; அண்மைய திருத்தத்திலும் இந்த ஏற்பாடு உள்ளடக்கப்படவில்லை.


103ம் இலக்க சாசனததின் உறுப்புரை 3(5) படி கர்ப்பம், பிரசவம் காரணமாக ஏற்படும்; நோய் நிலைமைகளுக்கு மேலதிக விடுமுறை வழங்கலாம்; என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில்; மேற்படி 2 சட்டங்களிலும்; ஏற்பாடுகள் காணப்படவில்லை. 2018 ஆண்டின் திருத்தத்திலும் சேர்க்கப்படவில்லை.
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு தந்தைமை விடுமுறை தொடர்பில் 3 வேலை நாட்கள் வழங்கப்பட்டுள்ள போதும் 2 சட்டங்களிலும் இந்த ஏற்பாடுகள் காணப்படவில்லை. 2018 திருத்தத்திலும் சேர்க்கப்படவில்லை.


இலங்கை சட்டங்கள் 103ம் இலக்க சாசனத்துடன் முரண்பாடாகவுள்ள தன்மையும் காணப்படுக்கின்றது. அதன் படி குறித்த சமவாயத்தின் உறுப்புரை 4(4) படி மகப்பேற்று பாதுகாப்பின் பணரீதியான நன்மைகள் சமூகக்காப்புறுதிஃபொதுநிதியத்திலிருந்தே வழங்கப்படவேண்டும் என கூறுகின்றது. ஆனால் தனியாருக்கு உரியதான இரு சட்டங்களிலும் இலங்கையில் இது தொழில்தருனரின் தனிப்பட்ட பொறுப்புடைமையாக்கப்பட்டுள்ளது.


எனவே புதிய திருத்தங்கள் மூலம் இரு சட்டங்களின் ஏற்பாடுகளும் சமப்படுத்தப்பட்டது புலனாகின்றது. மகப்பேற்று நன்மைகள் தொடர்பில் அவை மாற்றத்தை ஏற்படுத்தின என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கொள்கையளவில் ஏற்பாடுகள் காணப்பட்டாலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதை மறுக்கமுடியாது.

முற்றும்

Back to top button