fbpx

வெற்றிலையின் மகத்தான மருத்துவ குணம்!

வெற்றிலை ஓர் மருத்துவ மூலிகையாகும். இதுகொடி வகையை சேர்ந்தது வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது.

வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்‘சி’அதிகம் உள்ளன. ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிந்த சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல், தலைப்பாரம் குணமாகும்.

வயது வித்தியாசமின்றி அனைவரும் எதிர் நோக்கும் நோய்களில் தேமலும் ஒன்று. இதற்கு 3 வெள்ளைப் பூண்டுடன் 3 வெற்றிலை சேர்த்து மைபோல் அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.

வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கி நன்கு பசி உண்டாகும். வாய்ப்புன் வயிற்றுபுண் ஆறும் விஷக்கடியால் ஏற்படும் பாதிப்பை முறிக்கும் தன்மை வெற்றிலைக்கு உண்டு.

வெற்றிலை சாறும் இஞ்சி சாறும் சம அளவு சேர்த்து (5ml )தினமும் குடித்துவர ஆஸ்துமா உட்பட நுரையிரல் சம்பந்தபட்ட நோய்கள் குணமாகும்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button