fbpx

அரச ஊழியர்களுக்கு வழிகாட்டும் ஆவணங்கள் [Updated 2023 – PDF]

அரச தொழிலில் இருப்பவர்கள் மற்றும் அரச தொழிலை எதிர்பார்த்திருப்பவர்கள் நிச்சயம் அறிந்திருக்கவேண்டிய அரசாங்க நடைமுறைகளை உள்ளடக்கிய வெளியீடுகள்,வர்த்தமானி அறிவிப்புகள் காணப்படுகின்றன.

அனால் பெரும்பாலானவர்கள் அவற்றை படிக்க முற்படுவதில்லை. இவற்றை நீங்கள் வாசிக்குமிடத்து உங்களின் சந்தேகங்களுக்கான விடை கிடைக்கும். அதில் முக்கியமான 4 வெளியீடுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

தாபன விதி கோவை(Establishment Code)

அரசாங்க தொழிலில் இருப்பவர்களின் மூல வழிகாட்டி நூல் இதுவாகும். அரசாங்க தொழிலின் நியமனம், சம்பளம், லீவு, இடமாற்றம், மேலதிக கொடுப்பனவு, புகைவண்டி ஆணை சீட்டு உட்பட முழுமையான விடயங்களை உள்ளடக்கியது. தமிழ் பிரதியை டவுன்லோட் செய்ய கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.(Establishment Code in Tamil)

தாபன விதி கோவை

நடைமுறை விதிகள்(Procedural Rules)

தாபன விதிக்கோவைக்கு மேலதிகமாக 2009 இல் வெளியிடப்பட்ட அதிவிசேஷ வர்த்தமானி இதுவாகும். அரச ஊழியர்களின் நியமனம், பதவியுயர்வு, இடமாற்றம் போன்ற விடயங்களின் விரிவான வழிகாட்டல்களை வழங்குகின்றது. தமிழ் பிரதியை டவுன்லோட் கீழே உள்ள இணைப்பை அழுத்தவும். (Procedural Rules in tamil 2009)

நடைமுறை விதிகள் (New 2022)

நடைமுறை விதிகள் (2009)

நிதியியல் ஒழுங்கு விதிகள்(Financial Regulations)

அரச அலுவலகங்களில் நிதி கையாளுகை இடம் பெறும்போது பின்பற்றவேண்டிய ஒழுங்கு விதிகளை உள்ளடக்கியது.ஆங்கில, தமிழ் பிரதியை டவுன்லோட் கீழே உள்ள இணைப்பை அழுத்தவும். (Financial Regulations in Tamil)

நிதியியல் ஒழுங்கு விதிகள் – Tamil

நிதியியல் ஒழுங்கு விதிகள் – English

பெறுகை வழிகாட்டுதல்கள் (Procurement Guidelines – Updated 2019)

அரச அலுவலகங்களில் இடம்பெறும் பொருட்கள்,வேலைகள்,சேவைகள் தொடர்பான பெறுகைகளை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த இந்த ஆவணம் வழிகாட்டும்.

பெறுகை வழிகாட்டுதல்கள் – Tamil

பெறுகை வழிகாட்டுதல்கள் – English

மேலும் செய்திகளுக்கு WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/CqABUJ4vt9T47Emf3tIpkO

எங்களுடைய பதிவுகளை SMS ல் பெறுவதற்கு உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button