fbpx

இலங்கையில் போட்டிப் பரீட்சைகளில் இலகுவாக வெற்றிபெறுவது எப்படி?

போட்டிப் பரீட்சைகளில் இலகுவாக வெற்றிபெறுவது எப்படி?

அரச போட்டிப் பரீட்சைகளில் இலகுவாக வெற்றிபெறுவது பற்றி பரீட்சை எழுதுபவர்கள் பல உத்திகளை ஆராய்ந்திருப்பார்கள். பரீட்சைக்கு தயாராபவர்களுக்கான போட்டிப் பரீட்சை வழிகாட்டி எனும் தொடரின் முதல் பதிவாக முக்கியமான உத்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

தற்போதைய நாட்களில் இலங்கையில் போட்டிப் பரீட்சைகளில் வெற்றிபெறுவது மிகுந்த சவால் நிறைந்ததாக உள்ளது. அது அதில இலங்கைக்கான சேவையாக இருந்தாலும் சரி மாகாண சேவையாக இருந்தாலும் சரி போட்டி மிக கடுமையாகவே உள்ளது.

இங்கு போட்டிப் பரீட்சைகளில் இலகுவாக வெற்றிபெறுவது பற்றிய 8 முக்கிய உத்திகள் தரப்படுகின்றன. இவற்றை சரியான முறையில் கவனத்தில் எடுக்குமிடத்து ஒரு போட்டிப் பரீட்சையின் முடிவிலேயே நீங்கள் வேலை வாய்ப்பை பெறமுடியும்.

1. போட்டி பரீட்சைக்கான பாடப்பரப்பை அடையாளம் காணுங்கள்

ஒரு வீடு ஒன்றை கட்டுவதற்கு முதலில் வரைபடம் தயார் செய்யப்படும். அதனை பின்பற்றியே தொடர்ச்சியாக கட்டுமான பணிகள் இடம்பெறும். அவ்வாறே போட்டிப் பரீட்சைக்கு படிப்பதற்கு முன்னர் பாடப்பரப்பை மனதில் பதித்துவையுங்கள்.

இதன் மூலம் இந்த போட்டிப் பரீட்சையின் நோக்கம் என்ன? எமக்கு என்னவெல்லாம் தெரியும் என எதிர்பார்க்கிறார்கள்? எனக்கு இருக்கும் அறிவை விட வேறு என்னென்ன விடயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்? எந்த பகுதி இலகுவாக இருக்கும்? இந்தப்பகுதி கடினமாக இருக்கும்? கடினமாக இருக்கும் பகுதிகளை சமாளிக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? என்றவரான கேள்விகளுக்கு விடைகாண்பது பற்றி உங்கள் மனதில் எண்ணங்கள் தோன்றும். இதிலிருந்து நீங்கள் படிக்கவேண்டிய பகுதிகள் எதுவென்று உங்களுக்குள் ஆழமாக பதிந்துவிடும்.

2. குறிப்புகள் எழுதிவைத்து படியுங்கள்

போட்டிப் பரீட்சைக்கு படிக்கும்போது புத்தகங்கள், பத்திரிகைகள், வீடியோ பதிவுகள் மூலமோ படித்துக்கொண்டிருப்போம். எல்லா மூலங்களும் கைவசம் இருப்பதாக எண்ணி பொதுவாக குறிப்புகள் எடுப்பதில்லை. ஆனால் நீங்கள் குறிப்பு எழுதி படிக்கையில் பல நன்மைகள் உண்டு. எழுதும் போது வாசிக்கும் வேகத்தைவிட மெதுவாக இருப்பதால் விடயத்தை உள்வாங்கி மனதில் பதித்து வைக்கவும் உதவும்.

மேலும் படிக்கும் விடயங்கள் மனதில் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கவும் முடியும். இதனைவிட குறிப்புகள் எழுதும்போது உங்களுக்கு மீட்டல் செய்யும்போது மிக இலகுவாக இருக்கும். போட்டிப் பரீட்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய பகுதிகளை அடையாளப்படுத்தவும் இது உதவும்.

3. போட்டிப் பரீட்சை தொடர்பாக அதிக புத்தகங்கள் வாங்காதீர்கள்

பொதுவாக எல்லோரும் போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்ட பின் சித்திபெற வேண்டும் என்ற ஆவலில் போட்டிப் பரீட்சை சம்பந்தமாக வெளிவந்த சகல புத்தகங்களையும் வாங்கி குவிப்பார்கள். போட்டிப் பரீட்சைக்கு புத்தகம் எழுதுபவர்களும் கோரப்பட்ட பரீட்சைக்கு ஏற்றாற் போல் தங்கள் பழைய புத்தகத்திற்கு முகப்பு ஆட்டையை மாற்றி விற்பனை செய்வதும் நடந்து வருகின்றது.

இவ்வாறு அதிக புத்தகங்கள் கையில் இருக்கும் போது எதனை முதலில் படிப்பது? என்பது தொடர்பில் குழம்பில் நிலையில் இருப்பர். இதனால் படிக்கும் வேகம் குறைந்துவிடவும் சாத்தியம் இருக்கிறது.

எனவே முதலில் நன்றாக ஆராச்சி செய்து சிறந்த 1-2 புத்தகங்களை மட்டுமே குறித்த பாடத்துக்கு வாங்க வேண்டும்.

4. உங்களுக்கு நீங்களே டெஸ்ட் வச்சு பாருங்கள்

நீங்களே சில மாதிரிவினாக்களை போட்டிப் பரீட்சை அமைப்பில் எழுதி புள்ளிகளை அறியுங்கள். இதன் மூலம் உங்கள் தற்போதைய மட்டம் என்ன? போட்டிப் பரீட்சை எழுத மேலும் என்னென்ன தயார்படுத்தல் செய்யவேண்டும் என அறியமுடியும்.

எமது Youtube சேனலை Subscribe செய்ய கீழே உள்ள Button ஐ அழுத்துங்கள்.

5.Positive ஆக எப்பொழுதும் இருங்கள்

போட்டிப் பரீட்சை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பதட்டம், குழப்பம், டென்ஷன், ஸ்ட்ரெஸ் நிச்சயமாக இருக்கும். ஏனெனினில் பல ஆயிரம் நபர்கள் உங்களுடன் போட்டி போடுகின்றார்கள். இதனை எண்ணி நீங்கள் பதட்டமாக உணர்ந்தீர்கள் என்றால் உங்கள் மனதை Positive ஆக மாற்ற முற்படுங்கள்.

ஒரு ஆராச்சியில் சொந்த முயற்சியில் பணக்காரர்கள் ஆனவர்களின் குணங்களில் முக்கியமாக உள்ளது அவர்களின் Positive இயல்பாகும். Positive ஆக இருத்தல் நடைமுறையில் சாத்தியமான ஒரு பண்பாகும். உங்கள் மனதுக்கு Positive ஆக இருப்பதை பழக்க பழக்க அது இலகுவானதாக மாறும். கடந்தகால போட்டிப் பரீட்சை தோல்விகளை எண்ணி வருத்தப்படாமல் நடக்கவிருக்கும் போட்டிப் பரீட்சையை Positive ஆக அணுகுங்கள்.

6.புத்திசாலித்தனமாக(Smart ) படியுங்கள். கடினமாக(Hard) படிக்காதீர்கள்

நீங்கள் படிக்கவேண்டிய பகுதிகளை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். மனப்பாடம் செய்யவேண்டிய பகுதிகள், பிரச்சினை தீர்க்கவேண்டிய பகுதிகள், தர்க்கரீதியாக படிக்கவேண்டியவை என பகுதிகளாக பிரித்து அதற்கேற்றால்போல் உங்களை தயார்படுத்துங்கள்.

இந்த பகுதிகளை மாறிமாறி கற்கும் பொது மனதில் இலகுவாக பதியும். அதாவது எப்பொழுதும் கணித வினாக்கள் இலகுவாக இருக்கின்றதே என எண்ணி முழு நேரத்தையும் அதில் செலவுசெய்யக்கூடாது.

7. நேர முகாமைத்துவம்

நேரத்தை சிறப்பாக முகாமை செய்தால் குறைந்த நேரத்திலேயே அதிக விடயங்களை கற்கமுடியும். போட்டிப் பரீட்சை எழுதும் நேரத்திலும் இந்த பண்பு கைகொடுக்கும். சிறந்த நேரமுகாமைத்துவமானது உங்களின் சரியான திட்டமிடலிலிருந்தே ஆரம்பிக்கின்றது.

8. போட்டிப் பரீட்சை வகுப்புகளுக்கு செல்லுங்கள்

முன்னயநாட்களில் போட்டிப் பரீட்சைகளில் வகுப்புகளுக்கு செல்லாமலே பலர் சித்திபெற்றிருப்பர்.

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. போட்டி தன்மை அதிகரிப்பின் காரணமாக அதிகளவு எங்களை தயார் செய்யவேண்டியுள்ளது. அதனால்வகுப்புகளுக்கு செல்லும் போது பாடப்பரப்புடன் எப்பொழுதும் உங்களை இணைத்து வைத்திருக்கமுடியும்.

9. மேலதிக உத்திகள்

A.உங்களுக்குரிய போட்டிப் பரீட்சையை தெரிவு செய்யுங்கள். எல்லா போட்டிப் பரீட்சைக்கும் விண்ணப்பித்துக்கொண்டிருக்க கூடாது.

B.உங்கள் தகுதிக்கு குறைவாக கோரப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்ககூடாது.

C.அகில இலங்கைக்கான சேவை போட்டிப் பரீட்சை, மாகாண சேவை போட்டிப் பரீட்சை போன்றவற்றின் வினாத்தாள் அமைப்பு முறை மாறுபடலாம். எனவே கடந்தகால போட்டிப் பரீட்சை வினாத்தாள் தேட முற்படவேண்டும்.

D.அகில இலங்கை சேவை பொது அறிவு வினாத்தாள்களில் தயார் செய்வதில் பாடசாலை புத்தகங்களின் பங்கு காணப்படுகின்றது. எனவே தரம் 6- 11 வரையுள்ள வரலாறு, குடியுரிமை, புவியியல் போன்ற புத்தகங்களை வாசித்துவைப்பது நன்று.

E.மொழி அறிவு, சுருக்கம் போன்றவை சம்பந்தப்பட்ட வினாத்தாள்கள் இடம் பெறும்போது தரம் 6-11 வரையான தமிழ்மொழி புத்தகம் வாசிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்.

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    Back to top button