fbpx

பிரான்சில் உயரும் எரிசக்தி விலை! மூடப்படும் பல வணிகங்கள்!

எரிசக்தி செலவினங்களை சமாளிக்க முடியாமல் பல வணிகங்கள் தங்களின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளன. வரவிருக்கும் வாரங்களில் இந்த நிலைமை இன்னும் மோசமடையும் என்று பல துறைகள் அஞ்சுகின்றன.

Cofizio நிறுவனம் இந்த திங்கட்கிழமை முதல் செலவுகளைக் கட்டுப்படுத்த உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. பிரான்சில் இந்த முடிவை எடுத்த முதல் உணவுத் தொழில் குழு இதுவாகும்.‌. கண்ணாடி உற்பத்தியாளர் Duraplex , டேபிள்வேர் நிபுணரான Arc International, தங்களின் உற்பத்தியை குறைத்துள்ளனர்.

ஜவுளித் துறையில், ஆண்டின் தொடக்கத்தில், பல நிறுவனங்கள் பதினைந்து நாட்களுக்கு வேலையை நிறுத்தியுள்ளது. இந்த குழுக்கள் நஷ்டத்தில் செயல்படுவதை விட தற்காலிகமாக மூட விரும்புகின்றன, சில உணவகங்களும் சமீபத்தில் இதே போல் மூடப்பட்டுள்ளன.

Back to top button