fbpx

பல்கலைக்கழக வாய்ப்புக்களை தவறவிட்டவர்களுக்கு முக்கிய தகவல்

பல்கலைக்கழக வாய்ப்புக்களை தவறவிட்டவர்களுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகமும்(Open University of Srilanka) பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய பெறுமதியான வாய்ப்புக்களை வழங்குகிறது !

உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகங்களில் நிலவுகின்ற இடப்பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் அனுமதியானது மட்டுப்படுத்தப்படுகின்றது.ஆனால் அவ்வாறான அனுமதி வாய்பபை இழந்தவர்களுக்கு இன்று அரசின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களினூடாக பட்டப்படிப்பை பூர்த்தி செய்யக்கூடிய மிகப்பெறுமதியான வாய்ப்பு இன்று நாட்டில் காணப்படுகிறது.அவ்வாறான மிகப்பெறுமிதயான ஒரு வாய்ப்புத்தான் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.

இங்கு உயர்தரப்பரீட்சை சித்தியடையாத மாணவர்களும் கற்பதற்கான சில கற்கைகளை கற்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது சிறப்பம்சாகும். அவ்வாறு கற்க விரும்புவர்கள் உயர்தரப்பரீட்சைக்கு சமனான ஆரம்ப கற்கையொன்றை தொடர வேண்டும்.

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறாதவர்களுக்காக ஏராளாமான உயர்கல்வி வாய்ப்புக்கள் இன்று நமது நாட்டிலே ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த வாய்ப்புக்களில் நாம் கண்டுகொள்ளத்தவறும் மிக பெறுமதிமயான வாய்ப்பே இலங்கை திறந்த பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகளாகும்.

இலங்கை திறந்த பல்கலைக்கழமானது இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற முற்று முழுதான அரச பல்கலைக்கழகமாகும்.

தொலைதூரக்கல்வி (Open and Distance Education) என்னும் முறையிலான நவீனமான கல்வித்திட்டத்தை உள்ளடக்கிய பாடநெறிகளே இங்கு வழங்கப்படுகின்றன. மிகவும் குறைவான கட்டணங்களோடு மிகப் பெறுமதியான பட்டப்படிப்புகளே இங்கே வழங்கப்படுகின்றன என்பதே மிக விஷேட அம்சமாகும்.தனியார் துறையிலே பட்டங்களை பூர்த்தி செய்வதற்கான கட்டணங்களை விட ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான கட்டணங்களே இங்கு அறவிடப்படுகின்றன. மாணவர்கள் தொழில்வாய்ப்புக்களில் ஈடுபட்டுக்கொண்டே இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கற்கக்கூடிய மிகப்பெறுமதியான வாய்ப்பு உள்ளது.

இங்கே கற்பதற்காக அனுமதியைப்பெற்றுக்கொள்ள சில பாடநெறிகளுக்கு விண்ணப்பித்து தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவதோடு,சில கற்கைகளுக்கு தெரிவுப்பரீட்சைகளும்(Entrance exam) இடம்பெறும்.

இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பீடம், பொறியியல் தொழிநுட்ப பீடம், சுகாதார விஞ்ஞான பீடம், மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடம், இயற்கை விஞ்ஞான பீடம் மற்றும் முகாமைத்து கற்கைகள் பீடம் ஆகிய பீடங்கள் காணப்படுகின்றன.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்ற பட்டப்படிப்புக்கள் சில பின்வருமாறு

1.Bachelor of Arts Honors in Library and Information Studies

2.Bachelor of Arts in English and English Language Teaching

3.Bachelor of Arts in Social Sciences

4.Bachelor of Arts in Youth and Community Development

5.Bachelor of Education – Drama & Theatre

6.Bachelor of Education Honours in Primary Education

7.Bachelor of Education in Special Needs Education

8.Bachelor of Industrial Studies Honours

9.Bachelor of Laws Degree Programme

10.Bachelor of Management Studies

11.Bachelor of Medical Laboratory Sciences Honours

12.Bachelor of Pharmacy Honours

13.Bachelor of Science

14.Bachelor of Science Honours in Nursing

15.Bachelor of Science Honours in Psychology

16.Bachelor of Software Engineering Honours

17.Bachelor of Technology Honours in Engineering

18.Bachelor of Education Honours in Natural Sciences Degree Programme

உங்களுக்கு ஆர்வமான துறையை சிந்தித்து தெரிவு செய்து உயர்கல்வியினை தொடருங்கள்.பெறுமதியான வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Back to top button