fbpx

பயணச்சீட்டு இன்றி இரயிலில் பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இந்த நிலைமை புறக்கோட்டை மற்றும் மருதானை ஆகிய இரயில் நிலையங்களில் காணப்படுகிறது. பயணச்சீட்டு இன்றி இரயிலில் பயண நடவடிக்கையினை முன்னெடுக்கும் சிலர் இரயில் நிலையங்களை விட்டு வெளியேற முயற்சிக்கும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாக இரயில் நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தோற்று பரவிய காலப்பகுதியில் இரயில் பயணச்சீட்டுகள் முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும், இதனை வழக்கமாகக் கொண்டு பயணிகள் இரயில் நிலையங்களை விட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் இந்த நிலைமை புறக்கோட்டை மற்றும் மருதானை ஆகிய இரயில் நிலையங்களில் காணப்படுவதாக இரயில் நிலைய அதிபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இரயில் பயணச்சீட்டு இன்றி பயண நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என இரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பயண நடவடிக்கையினை முன்னெடுக்கும் பயணிகளை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Back to top button