fbpx

அளவுக்கு அதிகமான வெப்பத்தால் மரணங்கள் ஏற்படும் சாத்தியம

அளவுக்கு அதிகமான வெப்பத்தால் மரணங்கள் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கலாம் என்று உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் பல்வேறு பகுதிகளை வெப்பம் வாட்டும் நிலையில் அமைப்பு அவ்வாறு கூறியுள்ளது.

கிரீஸின் சில பகுதிகளில் காட்டுத் தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.ஸ்பெயினிலும் இத்தாலியிலும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அமெரிக்காவில் மில்லியன் கணக்கானோர் கடுமையான வெப்பத்தை நேற்று (18 ஜூலை) எதிர்கொண்டனர்.

அரிஸோனா (Arizona) மாநிலத்தின் ஃபீனிக்ஸ் (Phoenix) நகரில் 49 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெப்பம் பதிவானது.தொடர்ந்து 19ஆவது நாளாக வெப்பநிலை 43 டிகிரி செல்சியசைத் தாண்டியுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆசியாவின் சில பகுதிகளில் பதிவாகியுள்ள கடும் வெப்பம் கனத்த மழைக்கு வித்திட்டுள்ளது.வெப்பநிலை அதிகரிக்கும்போது நிலத்திலிருந்து அதிக நீர் ஆவியாகி அது கடும் மழையாகப் பொழியும்.

இந்நிலையில், வெப்பம் தணியும் அறிகுறிகள் தற்போதைக்கு இல்லை என்று உலக வானிலை அமைப்பு சொன்னது.கடும் வெப்பத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் தயாராகவேண்டும் என்று அது கூறியது

Back to top button