180, 000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்கள் ஏலம்
180, 000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.
இவை எதிர்வரும் 5 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30, 000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60, 000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளன.
அத்துடன் 364 நாட்களைக் கொண்ட 90, 000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏலங்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி முற்பகல் 11 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும்.
ஏலத்திற்கான குறைந்தபட்ச தொகையாக 5 மில்லியன் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.