
சற்று முன்: யாழ் மாவட்டத்தில் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிப்பு!
வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவோர் அந்தப் பகுதி கிராம அலுவலகர்
ஊடாக தங்களது முழு விபரங்களை பதிய வேண்டும் என அம்மாவட்ட கொவிட் -19 உயர்மட்டக் குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன், வட.மாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், வட.மாகாண உளநல சேவை பணிப்பாளர் கேசவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்,
மருத்துவர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளை தளபதி உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது குறித்த கூட்டத்தில், ‘இறுதிச் சடங்கில் 25 பேருக்கு மாத்திரமே அனுமதி (2 தொடக்கம் 3 நாள்களில் நிறைவுறுத்த வேண்டும்.
வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் கலந்துகொள்வதற்கோ வருகை தருவதற்கோ தடை)
நடைபாதை வியாபாரம், மரக்கறி வியாபரத்திற்கு மட்டும் அனுமதி, தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்கத் தடை, திறந்த சந்தைக்கு அனுமதி இல்லை,
விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்கவேண்டும், மக்கள் கூட்டங்களை, பொது நிகழ்வுகளை ஒத்திவைக்கவேண்டும்
பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளுக்கு அனுமதி, உணவங்களில் இருந்து உணவு உண்பதற்குத் தடை (பொதிக்கு மட்டும் அனுமதி),
வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் கிராம அலுவலகர் ஊடாக பதிய வேண்டும்
தொழிற்சாலைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து தொழில் புரிவோர்,
முடக்கப்பட பகுதிகளில் இருந்து வருகை தந்து பணிபுரிவோருக்கு தங்குமிடம் உணவு வசதி ஏற்படுத்த வேண்டும்
அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் திரட்டு செய்யப்படவேண்டும், முடக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்ல தடை,
முடக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளே குடும்பத்தில் ஒருவர் மட்டும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்லலாம்
அவசர தொலைபேசி உதவி இலக்கமாக 021 222 5000 செயற்படும், அவசர நிலை கருதி ஒருங்கிணைத்த செயலகமாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் 7 நாட்களும் செயற்படும்.
ஆலயங்களில் மதகுருமார்களுக்கு மட்டும் அனுமதி, ஆலயங்களில் அன்ன தானங்களுக்கு தடை
பாடசாலைகளில் மாணவர் அனுமதிக்கான நேர்முக பரீட்சைக்கு கட்டுபாடுகளை கல்வி திணைக்களம் மேற்கொள்ளும்’ போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.