
யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு!
யாழ்ப்பாணம்-தென்மராட்சி மீசாலைப்பகுதியில் வாள்வெட்டு தாக்குதலொன்று இடம் பெற்றுள்ளது.
புத்தூர் சந்தியில் அமைந்துள்ள பூதவராஜர் ஆலயத்தடியில் இரவு 9 மணியளவில் இடம் பெற்ற தாக்குதலில் மீசாலையை சேர்ந்த 28 வயதான நரேந்திரகுமார் சசிவர்மன் என்பவர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பில் கொடிகாமம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.