Trending
மீண்டும் மின்கட்டணம் அதிகரிப்பு?
இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுயில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைப்பதில் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதனால் மின்சார வாரியம் முன்வைத்த முன்மொழிவு பொதுமக்களுக்கான கலந்தாய்வு ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.