மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் (SDFR- Repo ,SLFR- Reverse Repo)அதிகரிப்பு!!!
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2021 ஆவணி 19 ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் – Standing Deposit Facility Rate (SDFR) – REPO துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் – Standing Lending Facility Rate (SLFR) -REVERSE REPO முறையே 5 சதவீதம் மற்றும் 6 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. மேலும் வங்கி வீதம் 9% ஆகவும் நியதி ஒதுக்குத் தேவைப்பாடு [Statutory Reserve Ratio (SRR)] 4% ஆகவும் தீர்மானிக்கப்பட்டது . உலக பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலனையில் கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது.
தற்போது நிலவும் தாழ்ந்த பணவீக்கச் சூழல் மற்றும் நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் மற்றும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையினால் எழுந்துள்ள புதிய சவால்கள் என்பனவற்றின் பின்னணியில் நீடித்து நிலைத்திருக்கும் பொருளாதார மீட்சியொன்றிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு சபையானது தற்போதுள்ள தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைப் பேணுவதற்குத் தொடர்ந்தும் கடப்பாடு கொண்டுள்ளது.
நிதி தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.