
கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி தேர்தல் – வேட்பு மனு செலுத்தியது ஐக்கிய மக்கள் சக்தி
2023 உத்தேச உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனு இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது .
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் (21) செலுத்தியது
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் (தமிழ்) உமாசந்திரா பிரகாஷ் பிரசன்னமாகியிருந்தார்.