fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

முகப்பொலிவை மேம்படுத்த இயற்கை கூறும் வழிகள்!

முகத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பேஷியல் இந்த காலத்தில் தேவை. இதில் செலவில்லா சரும பேஷியலை பப்பாளி பழம் தரும். பப்பாளி பழக்கூழை 10 முதல் 15 நிமிடங்கள் வரை முகத்தில் பூசி வைத்து, பிறகு இளஞ்சூடான வெந்நீரில் முகத்தை கழுவினால் போதும். தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை பளிச்சிட வைக்கும். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் பப்பாளித்தோலின் அடிப்பகுதியை பூசிவர, சருமம் நீரோட்டம் பெற்று பொலிவடையும்.

வெள்ளரிக்காய்களை நறுக்கிக்கண்களில் வைத்துக்கட்டினால் கண்கள் பிரகாசம் அடைவதோடு, கண் எரிச்சலும் மட்டுப்படும். கணினி முன்னால் அதிக நேரம் செலவிடுபவர்கள், கண்களின் மேல் வெள்ளரியை வைத்துக்கொள்வது சிறந்தது.

அதே போல வெள்ளரிக்காயை அரைத்து பூசினால் தோலில் உள்ள இணைப்பு திசுக்கள் ஊட்டம் பெறுவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் எரிச்சலும் குறையும். கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் வளையத்தை வைப்பதோடு, விளக்கெண்ணெயும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தை போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள். முகத்தில் கற்றாழை கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். இதே போல் கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களை தடுக்கிறது.

முகச்சவரம் செய்து முடித்த பிறகு `தேங்காய் எண்ணெய் – கற்றாழை கலவையை’ தடவுவதால் சவரம் செய்யும்போது உண்டான சிறு சிராய்ப்புகள் விரைவாக குணமடையும். முகமும் பிரகாசமடையும். எண்ணெய்ப்பசை சருமத்தை கொண்டவர்களுக்கு கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்து சிறுவர்களின் இயற்கை ஒப்பனை பொருள் குளுகுளு கற்றாழைதான்.

முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும் தடுக்கவும் தக்காளி பேஷியல் உதவுகிறது. இதில் உள்ள சத்துகள் தோலுக்கு ஊட்டம் தருகிறது. வாரத்துக்கு 2 முறை தக்காளியை மசித்து தயிரோடு சேர்த்து தடவிவந்தால், முகப்பருக்கள் நீங்கி முகப்பொலிவு உண்டாகும். முகத்தை எப்போதும் பொலிவோடு வைத்துக்கொள்ள வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் முகப்பொலிவை பெருமளவு பாதிக்கும். எனவே மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும், அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தி ஆகும்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button