கடனில் இருந்து மீள்வது எப்படி?
செலவுகளை குறைப்பது, சிக்கனமாக இருப்பது, அதிகம் சேமிப்பது, அதிக வட்டி கடனை முதலில் அடைக்கத் துவங்குவது என கடனில் மூழ்கியவர்கள் மீண்டுவர பலவிதமான வழிகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இதற்கு இன்னொரு மாற்று வழி இருக்கிறது என ஊக்கமளிக்கிறார் டேவிட் கார்ல்சன். பகுதி நேர பணி தான் அந்த வழி! பகுதிநேர வேலை மூலம் கூடுதலாக சம்பாதித்து, கடனில் இருந்து விடுபடலாம் என வலியுறுத்தும் கார்ல்சன், இதற்கான வழிகளை, ‘ஹஸ்ட்ல்
அவே டெப்ட்’ புத்தகத்தில் விவரிக்கிறார்:கடனில் இருந்து விடுபட, செலவை குறைப்பது ஒரு வழி என்றாலும், ஒரு அளவுக்கு மேல் செலவை குறைப்பது சாத்தியமில்லை. இதற்கு பதிலாக வழக்கமான வேலை போக எஞ்சி உள்ள நேரத்தில், பகுதி நேர வேலை செய்து, பணம் சம்பாதிப்பது சிறந்த வழியாக அமையும்.ஆனால், அதற்கு முன் பகுதிநேர வேலை ஏன் என்று புரிந்து கொள்ள வேண்டும். கடனை அடைக்கும் எண்ணம், வருமான வாய்ப்புகளை அதிமாக்கி கொள்ள விருப்பம், தொழில்முனைவில் ஆர்வம் என பல காரணங்களினால் பகுதிநேர வேலையை நாடலாம். பகுதி நேர வேலையை துவக்குவதற்கு முன், மேலும் சில முக்கியமான கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் தற்போது பார்க்கும் வேலையில் மேம்படுத்திக்கொள்ளக்கூடிய விஷயங்கள் இருக்கின்றனவா? பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கு முயற்சிப்பது சாத்தியமா? வேறு நல்ல வேலை தேடிக்கொள்ள முடியுமா? பணம் சம்பாதிப்பதற்காக எதையேனும் கற்றுக்கொள்ள முடியுமா? இந்த கேள்விகளை எல்லாம் மனதுக்குள் கேட்டுக்கொண்ட பின் உங்களுக்கான சரியான பகுதி நேர வேலைவாய்ப்பை தீர்மானிக்க வேண்டும்.பகுதி நேர பணியை எவ்வளவு காலம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறீர்கள்? இது குறுகிய காலத்திற்கானதா அல்லது நீண்ட காலத்திற்கானதா என தீர்மானிக்க வேண்டும். குறுகிய காலம் எனில், அதிக முதலீடு தேவைப்படாது. நீண்ட கால பணி என்றால், அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
பகுதி நேர பணிக்கான நோக்கம் என்ன? நீங்கள் புதிய வேலை வாய்ப்பை நாடுகிறீர்கள் அல்லது குறிப்பிட்ட இலக்கிற்காக பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா? என முடிவு செய்ய வேண்டும்.பகுதி நேர பணிக்காக உங்களால் எவ்வளவு நேரம் செலவிட முடியும், திட்டமிட்டதை விட அதிக நேரம் தேவைப்பட்டால் என்ன செய்வீர்கள்?இந்த பணிக்காக உங்களால் மேலும் நேரத்தை விடுவித்துக்கொள்ள முடியுமா? இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காமல் இருக்க வேண்டும்.பகுதி நேர பணிகளில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. ஒரு சில பணிகள் துவங்கியவுடன், பணம் அளிக்கத் துவங்கும். வார இறுதியில் வேலை பார்ப்பது, பிட்சா டெலிவரி செய்வது போன்றவை இதில் அடங்கும்.மேலும் சில பணிகளில், உடனடியாக பணம் சம்பாதிப்பது சாத்தியமில்லை. இந்த பணிகளில் வெற்றி பெற கொஞ்சம் உழைக்க வேண்டும். தொழில்முனைவு தன்மையும் தேவை. ஆனால், நீண்ட கால நோக்கில் அதிக பலன் அளிக்கும்.
எங்களுடைய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவதற்கு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.