
மொபைல் போன் இணைய வேகத்தை அதிகரிப்பது எப்படி?
உங்கள் மொபைல் போன் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி?
மொபைல் போனில் இன்டர்நெட் பாவிப்பவர்களுக்கு அதன் வேகம் குறைவாக இருப்பதே முக்கிய குறைபாடாக உள்ளது. 4G கிடைக்கக்கூடிய பிரதேசமாக இருந்தால் கூட இந்த சிக்கல் தொடர்ந்து காணப்படுகின்றது. இந்த இடர்பாட்டை எவ்வாறு தவிர்ப்பது பற்றி இங்கு தெளிவுபடுத்தப்படுகிறது. தொழில்நுட்பம் பற்றிய விடயங்களை ஆராயும் தொடரின் முதல் பதிவாக இதனை உங்களுடன்பகிர்ந்துகொள்கின்றோம்.
இங்கு மொபைல் போன் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது பற்றிய 5 முக்கிய உத்திகள் தரப்படுகின்றன. இவற்றை சரியான முறையில் பின்பற்றும்போது உங்கள் மொபைல் மூலம் வேகமான இணைய அனுபவத்தைப்பெறமுடியும்.
1. உங்கள் வீட்டில் நெட்வேர்க் கவரேஜ் உள்ள இடத்தை கண்டுபிடித்தல்
கவரேஜ் தொடர்பாக உங்கள் பிரதேசத்தில் பிரச்சினை இருந்தால் இந்த நடைமுறையை பின்பற்றுங்கள். முதலில் போன் Settings க்குள் About Phone எனும் பகுதியில் உள்ள Sim Status ஐ அழுத்தவும். பின்னர் அதில் Signal Strength எனும் பகுதி காணப்படும். அங்கு உள்ள இலக்கம் -105 ஐ விட குறைவாக (உதாரணமாக -105,-110,-115……… இவ்வாறாக இருத்தல்) இருக்குமிடத்து அங்கு சிக்னல் குறைவாக இருக்கிறது என அர்த்தம்.
எனவே குறித்த இலக்கத்தை அவதானித்தவாறு வீட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் சோதிக்கவேண்டும். எந்த பகுதியில் -80,-90 அளவீடுகளில் இருக்கின்றதோ அங்கு சிக்னல் போதுமானதாக இருக்கும் எனலாம். போன் முகப்பில்காட்டும் சிக்னல் அடையாளத்தை பார்த்து இடத்தை தெரியு செய்வதைவிட இந்த முறை துல்லியமானது. இது ஆண்ட்ராய்டு போன்களுக்குரிய முறையாகும்.

2. உங்கள் மொபைல் இன்டர்நெட் வேகத்தை கண்டறிதல்
கவரேஜ் இருந்தும் இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால் இந்த படிமுறையை பின்பற்றவேண்டும். இதற்கு இனைய வேகத்தை அளவிடும் செயலி ஒன்றை உங்கள் போனில் நிறுவ வேண்டும். Google Play அல்லது App Store இல் V – SPEED Speed Test என தேடி டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். அதன் பின்னர் வீட்டின் வெவ்வேறுபகுதிகளில் சோதித்து இணையவேகம் அதிகமாக உள்ள பகுதியை தெரிவு செய்யலாம்.

3. Airplane Mode ன் பிரயோகம்
இந்த அணுகுமுறை பொதுவாக எல்லோரும் அறிந்த முறையாகும். அதாவது மொபைலில் கவரேஜ் போதுமானதாக இருந்தபோதும் சிலசமயம் இன்டர்நெட் இணைப்பு தொழில்படாமல் இருக்கலாம்.
இவ்வாறானநிலையில் மொபைல் போனில் Airplane Mode ஐ On செய்து 2 நிமிடத்தின் பின் மீள Off செய்யும்போது இன்டர்நெட் இணைப்பு வழமைபோல செயற்படும்.
4. உங்கள் பிரதேசத்தில் 4G இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படல்
சில சமயங்களில் இணைய சேவைவழங்குனர் குறித்த பிரதேசத்தில் 4G கிடைக்கும் என கூறினாலும் ,நடைமுறையில் நாம் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதை அனுபவித்திருப்போம்.
முதலில் போன் Settings க்குள் Sim Card and Mobile Network எனும் பகுதியில் உள்ள Preferred Network Type ஐ அழுத்தவும். இங்கு நீங்கள் 3G/2G போன்று உங்கள் பிரதேசத்திற்கு ஏற்றவாறாக மாற்றிக்கொள்ளலாம். பொதுவாக தொலைபேசி அழைப்புகளில் சிக்கல் இருந்தால் இதனை முயற்சி செய்யலாம்.

5. ரௌட்டர் இல் மொபைல் இன்டர்நெட் பாவித்தல்
ரௌட்டர் பாவிக்கும் போது இன்டர்நெட் வேகத்தில் சிக்கல் இருக்குமாயின் அதனை எப்பொழுதும் உங்களுக்கு அருகில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
வீட்டில் பல உறுப்பினர்கள் ரௌட்டர் ஐ பாவிக்கிறார்கள் எனின் வீட்டின் மத்திய பகுதியை அமைத்து ரௌட்டர் ஐ வைக்கவும். அதாவது ரௌட்டர் ஐ சுற்றியே சிக்னல் சென்றுகொண்டிருப்பதால் இதுமுக்கியமானது. அதிக தடைகள் உள்ள இடத்தில ரௌட்டர் ஐ வைக்கக்கூடாது.
எமது Youtube சேனலை Subscribe செய்ய கீழே உள்ள Button ஐ அழுத்துங்கள்.
6. மேலதிக உத்திகள்
A.குறித்த நெட்வேர்க் நிறுவன வாடிக்கையாளர் சேவை முகவரிடம் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யுங்கள். தற்போதுள்ள போட்டித்தன்மை காரணமாக நிறுவனங்கள் விரைவாக பிரச்சினைகளை தீர்த்துவைக்கும்.
B.ரௌட்டர் Settings பக்கத்தில் அடிக்கடி Update செய்து வைத்திருக்கவேண்டும்.
C.ஒரே நேரத்தில் பலர் ரௌட்டர் மூலம் இணையத்தை பயன்படுத்துவதாலும் வேகம் குறையும்.
D.இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் தரத்தினை ஆராய்ந்து அதன் பின்னரே இணைப்பை பெறவேண்டும்.
தொழில்நுட்பம் தொடர்பாக வெளியிடப்பட்ட Docs Agency Blog பதிவுகளை படிக்க இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
எங்களுடைய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவதற்கு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.