வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
எல்லோர் வீட்டிலும் இருக்கும் மிக மிக வெந்தயம் சமையலில் மட்டுமல்ல, ஆயுர்வேத மருத்துவத்திலும் மிகவும் சிறப்பு தன்மைகள் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இந்த வெந்தயத்தில் உள்ளது. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளையும் குணப்படுத்த வல்லது. இதனால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்வதால் உடல் உஷ்ணம் குறைந்து நாள் முழுவதும் குளு குளு வென இருக்கலாம்.
வெந்தயம் உடலில் கெட்ட கொழுப்பைக் நீக்கும் தன்மைக்கொண்டது. எனவே உணவில் வெந்தயம் சேர்த்துக்கொள்வதால் உடல் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் வெந்தயத்தைப் பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீரில் இந்த பொடியைக் கலந்து குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.
வெந்தயத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் வெந்தயம் கொழுப்பைக் குறைப்பதால், இதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பும் குறைவு.
வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டச் செய்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.
கரையக்கூடிய நார்ச்சத்து வெந்தயத்தில் இருப்பதால், மலச்சிக்கலில் இருந்து விடுபட காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவது நல்லது. ஃபைபர், கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் தாதுக்கள் இருப்பதால் செரிமான பிரச்சினைகள் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெற வெந்தயம் சாப்பிடுவது நல்லது.
அத்துடன் உடலின் இரத்த ஓட்டத்தை வெந்தயம் மேம்படுத்தும். இது கல்லீரலைச் சுத்தப்படுத்துவதுடன் உடல் முழுவதும் இரத்தம் சீராகவும் ஓட வெந்தயம் உதவுகிறது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.