உங்கள் வெற்றியை தடுக்கும் பழக்கங்கள்
உங்கள் வெற்றியை தடுக்கும் பழக்கங்கள் (Bad Habits)
உங்கள் வாழ்க்கையின் போக்கில் திருப்தியற்று இருக்கிறீர்களா? அப்படியானால் இந்தப்பதிவு உங்களுக்கு மிகவும் பெறுமதியானதாகும். வாழ்க்கை முறை எனும் தொடரின் முதல் பதிவாக சோம்பலை எவ்வாறு வெற்றிகரமாக இல்லாதொழிப்பது பற்றிய உத்திகளை உங்களுடன் பகிர்ந்திருந்தோம். இந்தப்பதிவில் உங்கள் வாழ்க்கையில் தடைகளாக இருக்கும் பழக்க வழக்கங்களை( Bad Habits) ஆராய்கின்றோம்.
வாழ்க்கையின் தலைவிதியை மாற்றுவதற்குரிய ஒரே வழி, உங்கள் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகும்.ஒருவருடைய வாழ்க்கையை அழிக்கின்ற 8 பழக்கவழக்கங்களை பற்றி கூறவிருக்கின்றோம். இவற்றை எப்போது மாற்றி விடுகின்றேர்களோ அப்பொழுதிலிருந்தே நீங்கள் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம்.
1. சுய கட்டுபாடு இல்லாதிருத்தல்
வாழ்க்கையை தொலைத்தவர்களின் முதல் பழக்கவழக்கமாக இது அமைந்திருக்கும். இவர்களுக்கு எப்படி வாழவேண்டும் என தெரியாது. ஒரு ஒழுங்கமைப்பின்றி செயல்களை செய்துவருவர். எப்போ தூங்குவீர்கள் என்று கேட்டால் எப்போது வேண்டுமென்றாலும் தூங்குவேன் என்றும் என்ன சாப்பிடுவீர்கள் என கேட்டால் என்ன வேணுமெண்டாலும் சாப்பிடுவேன் என பொதுவாக கூறுவார்கள்.
வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடுமில்லாமல் புகைத்தல், மதுபானம் போன்றவற்றுக்கு அடிமையாகியிருப்பர். எப்பொழுது மனிதன் கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றானோ அப்பொழுதே வாழ்க்கையை இழந்துவிடுகிறான். இந்த சுயகட்டுப்பாடற்ற தன்மை உங்கள் வாழ்க்கையில் இருந்தால், இப்பொழுதே அதனை விட்டுவிடுங்கள்.
2. தினசரி திட்டமில்லாதிருத்தல்
இன்று எந்த செயல்களை செய்யவேண்டும்? எந்த ஒழுங்கில் செய்ய வேண்டும்? போன்ற அடிப்படை தினசரி திட்டங்கள் இல்லாது இயங்கிக்கொண்டிருப்பர். காலையில் எழுந்த பின்னரே போனபோக்கில் வேலைகளை செய்துகொண்டிருப்பர்.
இவ்வாறான நபராக நீங்கள் இருந்தால் எப்பொழுதும் எழுதி வைத்து திட்டங்களை செயற்படுத்துங்கள்.
3. எதனை முன்னிலைப்படுத்த வேண்டும் என அறிந்திருக்கமாட்டார்கள்
உங்களுக்கு எதை முதலில் செய்யவேண்டும்,எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என தெரியாமல் போனால் வாழ்க்கையில் அதிகம் இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
வாழ்க்கையிலே ஒரு இலக்கு இல்லாதிருப்பதாலேயே இந்த நிலை ஏற்படுகின்றது. எனவே முதலில் உங்கள் இலக்குகளை தீர்மானித்துக்கொள்ளுங்கள். அவை சிறியதாக இருந்தால் கூட பிரச்சினை இல்லை.
4. காலம் தாழ்த்துதல்
வாழ்க்கையை தொலைத்தவர்களில் காணப்படும் பழக்கவழக்கங்களில் இது முக்கியமானது. எந்த வேலையை எடுத்தாலும் 1மணித்தியாலத்தில் செய்யலாம், நாளைக்கு செய்யலாம், அப்புறமா செய்யலாம் என படிப்படியாக வேலைகளை தாமதித்துக்கொண்டிருப்பர்.
நாளை என்பது இல்லை என்று உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். வேலைகளை திட்டமிட்டு குறித்த கால பகுதிக்குள் செய்ய பழகிக்கொள்ளுங்கள்.
5. அதிகம் தூங்குதல்
இவர்கள் வாழ்க்கையை தூங்கி வீணடிப்பார்கள். ஒருமனிதனுக்கு 7-8 மணி தூக்கம் மிக மிக போதுமானது. பகலில் தூங்குவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
அதிகமாக தூங்குவதற்கான காரணம் ஏற்கனவே சொன்னதை போல உங்கள் தூங்கும் நேரத்தை குறைத்து குறித்த செயல்களை செய்வதன் மூலம் அடையக்கூடிய இலக்கு ஒன்று இல்லாதிருத்தலாகும்.
எனவே வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என நினைத்தால் தூக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
மேலும் பகல் தூக்கத்தை தடுத்தல் தொடர்பாக ஆங்கிலத்தில் உள்ள பதிவை படிப்பதற்கு இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
எமது Youtube சேனலை Subscribe செய்ய கீழே உள்ள Button ஐ அழுத்துங்கள்.
6. பிரயோசனமற்ற செயல்களை செய்துகொண்டிருப்பர்
எந்தவொரு பலனையும் தராத செயல்களை செய்து நேரத்தை கடத்திக் கொண்டிருப்பார்கள். அதிக நேரம் மொபைல் போனை காரணமில்லாமல் செக் பண்ணுதல், சமூக வலைத்தளங்களில் செயற்படுதல், கேம்ஸ் விளையாடுதல் போன்று அதிக நேரத்தை உறிஞ்சும் வேலைகளை செய்துகொண்டிருப்பர்.
இங்கு பேஸ்புக், யூடியுப் பார்ப்பது தவறு என நம் கூறவில்லை. அவற்றை உங்களுக்கு பயனடையக்கூடிய வழிகளில் பாவிக்கவேண்டும்.
நேரம் கடந்து போனால் அதனை திரும்ப பெறமுடியாது என்ற உண்மையை நீங்கள் உணரவேண்டும்.
7. தோற்று போய் விடுவோமோ என்ற பயத்தில் எதுவும் பண்ணாதிருத்தல்
தோல்விகளை எதிர்கொள்வதற்கு அஞ்சி முக்கியமான,வாழ்ககைக்கு அவசியமான செயல்களை செய்வதில் பின்வாங்குவார்கள். பஸ்சில் ஏறுவதற்கு முன்னரே பஸ் விபத்துக்குள்ளாகும் என நினைத்தால் பிரயாணத்தை பூர்த்தி செய்யமுடியுமா?
உங்கள் தோல்விகள் தான் உங்களுக்கு பாடங்களை கற்றுத்தரும் என்பதை மறக்காதீர்கள். தோற்று போய்விடுவீர்கள் என்று பயம் என்றைக்கு தோன்றுகிறதோ அன்றிலிருந்தே வாழ்க்கையை தொலைக்க ஆரம்பிக்கிறீர்கள் என அர்த்தம்.
8. பொருத்தமற்ற மனிதர்களை உங்களுடன் வைத்திருத்தல்
நீதியும் நெறியும் இல்லாத மனிதர்களுடன் உறவுவைத்துக்கொள்ளுதல் உங்களை அழித்து விடும். உறவுகள் தான் உங்களை வளர்க்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்.
யாருடன் எந்தளவுக்கு உறவுகளை பேண வேண்டும் என தெரிந்து வைத்திருக்கவேண்டும். எந்த பெறுமதியும் இல்லாத, வாழ்க்கையில் எதுவும் பண்ணலாம், பணத்துக்காக எதுவும் செய்யலாம் என்ற மனநிலையுள்ள மனிதர்களுடன் கவனமாயிருங்கள்.
வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட Docs Agency Blog பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்.
எங்களுடைய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவதற்கு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.