fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

அரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 2

இலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் “அரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள்” என்ற தொடர், 4 பகுதிகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதன் முதல் பகுதி ஏற்கனவே வெளிவந்திருந்தது.

நிர்வாகசட்டத்தில் முக்கியமான வலுவிகழ்தல் கோட்பாடு (Doctrine of Ultra Vires) பற்றி முதல் பதிவில் கூறியிருந்தோம்.

இயற்கை நீதிக் கோட்பாடு

நிர்வாகச் சட்டத்தின் அடுத்த முக்கிய கோட்பாடாக கருதப்படுவது இயற்கை நீதிக் கோட்பாடாகும். இது நடைமுறை அதிகார வரம்பு மீறலுடன் தொடர்புபட்டது.

இது இரண்டு முக்கிய கொள்கைகளை உள்ளடக்கியது.

  • இருபுறம் கேட்டல் விதி
  • பக்கச்சார்புக்கு எதிரான விதி

ஒவ்வொரு வழக்கிலும் சட்டம் தொடர்பான வினாவிலும் நிகழ்வுகளிலும் அது இயற்கை சட்டத்திற்கு அமைவானதா என நீதிமன்றம் அவதானிக்கும்;.

றிட்ஜ் எதிர் பால்வின் வழக்கில் நிர்வாக துறையினர் Quasi Judicial பணியின் போது மட்டுமல்லாமல் நிர்வாக நடவடிகையின் போதும் இயற்கை நீதிக் கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும் என கூறப்பட்டது.

முதலாவது விதியானது நியாயமான விசாரனையின் போது மறுதரப்பினரின் வாதத்தை கேட்க வேண்டும் என கூறும். இலங்கை அரசியலமைப்பின் 13(3)ம் உறுப்புரையில் நியாயமான விளக்கம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜோசப் விலனகன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றச்சாட்டு தொடர்பாக நிர்வாகத்துறையினர் உரியவருக்கு அறிவிக்காமை இயற்கை நீதி மீறலாகும்.

கூப்பர் வழக்கிலும் இதே தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றச்சாட்டை மறுத்துரைக்க போதிய கால அவகாசம் வழங்கப்படாமையும் இயற்கை நீதி மீறலாகும்.

விசாரணையில் வாய்மூல விளக்கத்தை கேட்பது பூரண உரிமையாக அங்கிகரிக்கப்படவில்லை. நிர்வாக அமைப்புக்கள் தமக்கான நடபடி முறைகளை நிறுவி அதன்படி செயற்படலாம். நீதிமன்றம் போல் இறுக்கமான முறைகளை பின்பற்றாது குற்றம் சாட்டப்பட்டவருக்கு குற்றம் சாட்டியவரை அல்லது சாட்சியை விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும்.

தொழிலாளி மீது ஒழுக்க நடவடிக்கை எடுக்கும் வழக்குகளில் இவ்வுரிமை கட்டாயமானதென றோக்தாஸ் வழக்கில் கூறப்பட்டது.

இலங்கையில் சில வழக்குகளில் குறுக்குவிசாரணை கட்டாயமில்லை என கூறப்பட்டாலும் நாணயக்கார வழக்கில் சாட்சிகள் குறுக்குவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டது. சட்டப்பிரதிநிதிகளை நியமித்து வாதிடும் உரிமை நியாயமான விளக்கத்தில் (Fair Trail) முக்கிய பகுதியாக கருதப்படுவதில்லை.

ஆனால் நியாய சபைகள், நீதிமன்றங்கள் தமது தற்றுணிபு அடிப்படையில் தீர்மானிக்கமுடியும். அரச உத்தியோகத்தர்களுக்கான தாபன விதிக்கோவையில் ஒழுக்காற்று விசாரணையின் போது பிரதிநிதிகளை சார்பாக நியமித்து வாதிடும் உரிமை ஏற்கப்பட்டுள்ளது.

மேலும் நிர்வாகத்துறையினரால் வழங்கப்படும் தீர்மானங்களுக்கான காரணங்களை தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் நீதிமுறை மீளாய்வு செய்யும் போது அதன் சட்டவலிதாந்தன்மை குறித்து முழுமையான முடிவை அடைய முடியும்.

பாரபட்சத்திற்கு எதிரான விதி இயற்கை நீதிக் கோட்பாட்டின் இரண்டாவது விதியாகும்.

வழக்கொன்றில் நீதிபதியாக உள்ள நபர் அவ்வழக்கின் தரப்பினர் ஒருவருக்கு நெருக்கமானவராகவோ பகைவராகவோ இருப்பின் அவ்வழக்கை விசாரிக்கும் தகுதியை இழப்பார்.

பாரபட்சம் வெளிப்படையாக இருந்தால் சான்றுகள் மூலம் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. உண்மையில் நடக்க கூடிய தன்மை, நியாயமான சந்தேகம் பற்றிய சோதனை ஆகிய இரு பரிட்சார்த்தங்கள் மூலம் பாரபட்சத்திற்கு எதிரான விதி நிரூக்கப்படும்.

நீதிமன்றம் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு இவ்விதி மீறப்பட்டுள்ளதா என கண்டறிதல் முதலாவது வகையாகும். ஆனால் இதனை உறுதிப்படுத்த குறித்த நிகழ்வு தொடர்பில் வெறும் சந்தேகம் மட்டும் போதாது.

அல்றிஞ்சம் வழக்கில் தரப்பினருடன் தொடர்புபட்டவராக நீதிபதி இருந்தமையால் நியாயமான சந்தேகம் பற்றிய சோதனை அடிப்படையில் விதி மீறல் எனப்பட்டது.


அடுத்த நிர்வாகசட்ட கோட்பாடான நீதிமுறை மீளாய்வு கோட்பாடு (The Doctrine of Judicial Review) பற்றி பகுதி 3 இல் தெளிவு படுத்துகின்றோம்.

(தொடரும்)

சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்

    Back to top button