அள்ள அள்ள பணம்! – கொழும்பு பங்கு சந்தையில் இணைவது எப்படி?
பங்கு சந்தை என்றால் என்ன என்பது பற்றிய அடிப்படை விளக்கங்களை இந்திய தமிழ் பங்குசந்தை ஆலோசகர்கள் எழுதிய கட்டுரைகளின் சுருக்கங்கள் தொடராக வந்தது. தற்போது எமது கொழும்பு பங்கு சந்தையில் எவ்வாறு முதலிடுவது, வர்த்தகம் செய்வது பற்றி தொடர்ந்து பதிவிடுகின்றோம்.
தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக வீழ்ச்சியடைந்த பங்குசந்தை மீள வளர்ச்சி பெற்று வருகின்றது. நீங்கள் முதலீடு செய்ய இதுவே சரியான தருணமாகும். உங்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் எம்மை நேரடியாக தொடர்புகொண்டு (077129907) அறியமுடியும்.
இந்த பதிவில் கொழும்பு பங்கு சந்தையில் நுழைவதற்க்கான படிமுறைகளை தெளிவுபடுத்துகின்றோம்.
- கொழும்பு பங்கு சந்தையில் நுழைவதற்கு முதலில் CDS கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.
- இதனை நாம் CSE ன் முகவர் நிறுவனங்களினூடாக செயற்படுத்தவேண்டும்.
- அடையாள அட்டை , மற்றும் வங்கிபுத்தக பிரதியுடன் குறித்த நிறுவனங்களை அணுகினால் போதுமானது. சம்பந்தப்பட்ட படிவங்களை பூரணப்படுத்துவதில் உதவுவார்கள்.
- யாழ்ப்பாணத்தில் CSE கட்டிடத்திலேயே மேற்படி முகவர் நிலையங்கள் இயங்குகின்றனர். அதில் Softlogic Stock Brokers சிறந்ததாக அறியப்படுகின்றது.
- பின்னர் 15-20 நாட்களில் உங்கள் CDS கணக்கு ஆரம்பிக்கப்பட்டதும் நீங்கள் Trading or Investing செய்ய முடியும்
- பங்குச்சந்தைக்கு புதியவர் எனின் Rs 5000 – 10000 முதலிட்டு உங்களை தயார்படுத்திக்கொள்ளலாம்
- தற்போது Mobile App ஊடாகவும் Trading or Investing செய்ய முடியும்.
- பங்குசந்தையில் வர்த்தகம் செய்தல் சூதாட்டமல்ல. உங்கள் நிதி தொடர்பான அறிவுக்கு கிடைக்கும் இலாபமாகும்.
நிதி தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது பதிவுகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்