fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

யாழில் குப்பைக்குள் 42 பவுண் தங்க நகைகள்; நடந்தது என்ன!

யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள்  தவறுதலாக குப்பைக்களுக்குள்  போடப்பட்டதாக    கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில்  தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

போத்தல் ஒன்றினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக கழிவு வைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டதாக  பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.  

இந்நிலையில், தமது நகைகள் தவறுதலாக குப்பையோடு போடப்பட்டதனை உணர்ந்த உரிமையாளர்கள் இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து விசாரணை நடத்திய போதிலும் இதுவரை காணாமல் போன நகைகள் தொடர்பாக எந்த விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என  கூறப்படுகின்றது.

யாழில்  கொள்ளைகளும் திருட்டு சம்பவங்கள்  அதிகரித்து வரும் நிலையில் மக்கள்  பாதுகாப்பாக தங்கள் பொருட்களை  வைத்திருக்க வேண்டிய நிலையில்  உள்ளனர். 

அதேவேளை, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னராக சாவகச்சேரியில் இது போன்றதொரு சம்பவம் நடந்த நிலையில் சாவகச்சேரி நகரசபையின் ஊழியர்கள் தேடுதல் நடத்தி தவறுதலாக குப்பை மேட்டை வந்தடைந்த 18 பவுண் நகை களை மீட்டு உரிமையாளரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button