தண்ணீருக்குள் விழுந்த மொபைலை பழையநிலைக்கு கொண்டுவருவது எப்படி?
எங்கள் அனைவருக்கும் போனை தண்ணீருக்குள் வீழ்த்திய அனுபவம் உண்டு.பொதுவாக தண்ணீர் உட்புகுந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு எவ்வித வொரண்டியும் கிடைப்பதில்லை.போனை திருத்த முற்பட்டால் அதனால் ஏற்படும் செலவுகள் இன்னொரு போனை வாங்குவதற்கு சமனாகும்.
ஆனால் எம்மால் இயலுமானவரை சிறிதளவு முயற்சி செய்தால் சிலவேளை நனைந்த போன் மறுபடியும் இயங்க வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு நனைந்த போன் தொடர்பாக உடனே செய்யவேண்டிய முறைகளை கீழே காணாலாம்.
உடனடியாக தண்ணீருக்குள் விழுந்த போனை எடுக்க வேண்டும். இது ஒரு மிகச்சாதரண விடயமாகத் தோன்றலாம். சில நேரம் போன் தண்ணீருக்குள் வீழ்ந்தால் எமது மனம் சோர்வடைந்து எப்படியோ வேலை செய்யாது என எண்ணுவோம்.ஆனால் உடனே அதை வெளியே எடுத்தால் சில வேளை எம்முடைய போனை காப்பாற்ற வழிகள் உண்டு.
உடனே போனை சுவிட்ச் ஓஃப் பண்ணவும்
பொதுவாக போன் தண்ணீருக்குள் வீழ்ந்தாலோ முழுமையாக நனைந்தாலோ ஓஃப் ஆகிவிடும். அவ்வாறு ஓஃப் ஆகாவிட்டால் உடனடியாக போனை ஓஃப் பண்ணவேண்டும்.அவ்வாறு செய்வதனால் போனுக்குள் இருக்கும் மின் சுற்று பாதிக்காமல் இருக்கும்.
உடனடியாக பட்டரியை கழற்றவும்
பொதுவாக இப்போது வரும் போன்களில் பட்டரியைக் கழற்ற முடியாது.ஆனால் ஏதேனும் உபகரணங்களைப் பயன்படுத்தி பட்டரியைக் கழற்றினால் மேற்கொண்டு மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு போனின் சேர்க்கிட் போர்ட் வெப்பமடையாது.
சிம் மற்றும் மெமரி கார்ட்டைக் கழற்றவும்
போனின் கவர் மற்றும் சிம் கார்ட்,மெமரி கார்ட்டை உடனடியாக கழற்றி விடவேண்டும்.பின்னர் சிறிய காட்டன் துணியினால் ஈரத்தை ஒற்றி எடுத்தல் நன்று,ஆனால் எக்காரணம் கொண்டும் பேப்பரினால் துடைக்கக்கூடாது.ஏனெனில் பேப்பர் ஈரம் படும்போது கிழிந்து போய் ஏதேனும் ஓட்டைகளுக்குள் செருகிக்கொள்ள வாய்ப்புகளுண்டு.
காற்றுப்புகாத பையினுள் போட வேண்டும்
உங்களால் கூடுமானால் ஒரு பிளாஸ்டிக் பையினுள் போனை போட்டு காற்றை முழுமையாக உறிஞ்சி வெளியேற்றி எவ்வித காற்றும் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.இது போனின் நுணுக்கமான பகுதிக்குள் இருக்கும் ஈரத்தை உறிஞ்ச உதவும்.
அரிசி வாளிக்குள் போடவும்
இதுவொரு வித்தியாசமான நடைமுறையாக இருந்தாலும் சாதகமான எவ்வழிகளையும் கடைப்பிடிப்பதில் தவறில்லை. ஆகவே நனைந்த உங்கள் போனை அரிசி வாளிக்குள் இரண்டு நாட்களுக்கு போட்டு விடவேண்டும்.அது ஈரத்தை உறிஞ்சக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
அத்தோடு அரிசி மட்டுமல்லாமல் சிலிக்கன் ஜெல் பக்கட்டுகளுக்கிடையே வைத்தும் கூட ஈரத்தை உறிஞ்ச வைக்கலாம் இது எதுவும் வாய்க்காத போது நீங்கள் உங்கள் முடிவுகளை எடுக்கலாம்.ஆனால் அவசரப்பட்டு புது போனை வாங்குவதற்கு முன்னர் அல்லது வேறு போன் இருந்தாலும் கூட மேற்குறிப்பிட்ட முறைகளை முயற்சி செய்து பார்க்கலாம்.
தொழில்நுட்பம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.