fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

மேனகா காந்தி எதிர் யூனியன் ஒப் இந்தியா – தமிழில் முழுமையான விளக்கம் – பகுதி 3

1. சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறை என்ற வாசகத்தின் நோக்கெல்லை
இங்கு சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறை என்பது சட்டத்தின் மூலம் கூறப்பட்டுள்ள
நடைமுறைகளை சரியாக பின்பற்றுமிடத்து அது வலிதானதாக கருதப்படும். மாறாக
சட்டத்தின் முறையான நடவடிக்கை என்பது குறிப்பிட்ட சட்டம் நியாயமானதாகவும்
ஏதேச்சாதிகாரத்திற்கும் வழிகோலாமல் இருக்கின்றதா என்பதை பரிசோதிக்கும். இங்கு
முறையான நடைமுறை உயர்நிலை நீதிமன்றங்களுக்கு சட்டத்தை
வலிதற்றதாக்குவதற்கு அதிகாரத்தை வழங்குகின்றது. இந்திய அரசியலமைப்பு
உருவாக்கப்பட்ட சமயத்திலேயே முறையான நடைமுறை என்ற வாசகம் இந்திய
அரசியலமைப்பில் உள்ளடக்கவில்லை. அமெரிக்க அரசியலமைப்பில் அது
வெளிப்படையாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேனகாகாந்தி வழக்கு வரை சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறை எனும் வாசகம்
சட்டத்திலுள்ளவாறே பொருள்கோடல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் வாதியானவர்
சட்டத்தின் முறையான நடைமுறை இந்திய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படாவிடினும்
சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறைகள் நியாயமானதாகவும் ஏதேச்சாதிகாரம்
அற்றதாகவும் இருக்கவேண்டும் என வாதிட்டார். எதிர்வாதிகள் அரசியலமைப்பு
உருவாக்கத்தின் போது மேற்குறித்த இரு கோட்பாடுகளும் விரிவாக ஆராயப்பட்டே
சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறைகள் என்ற வாசகம் இறுதி செய்யப்பட்டதென்றும்
கூறப்பட்டது. அத்தடன் இதனை உருவாக்கியவர்களின் நோக்கமும் அதுவாகவே
இருந்திருக்க வேண்டும் எனப்பட்டது.


நீதிமன்றம் தீர்ப்பில் உறுப்புரை 21 ல் கூறப்பட்ட சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறை
என்ற வாசகத்தை நிலைநிறுத்தினாலும் குறித்த நடபடிமுறையானது
நியாயமானதாகவும்(Reasonable),எதேச்சாதகாரமற்றதாகவும்;(Nonarbitary),
முரணற்றதாகவும்;(Irrational) இருக்க வேண்டும் என்றனர். மேலும் முறையான
நடைமுறை என்ற வாசகத்தை தவிர்த்திருந்தாலும் அரசியலமைப்பை
உருவாக்கியவர்களின் நோக்கம் நடபடிமுறைகள் நியாயமற்றதாக இருக்கவேண்டும்
என்பதல்ல எனவும் வலியுறுத்தினர்.


எ.கே. கோபாலன் எதிர ; மட்றாஸ் அரசு(1950) (A.K. Gopalan v. The State Of Madras, (1950) AIR SC 27)வழக்கில் வாதியினால் உறுப்புரை 21 ல் கூறப்பட்ட சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறைகள் எனும் வாசகம் இயற்கைச்சட்டத்திற்கு அமைவானதாக இருக்க வேண்டும் என வாதிடப்பட்டது. எனினும் இந்த வாதம் மறுக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் நீதியரசர் பைசர் அலி வழங்கிய ஒருப்படாத தீர்ப்பில் சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறைகள் நியாயமானதாகவும் எதேச்சாதிகாரத்திற்கு வழிகோலாமலும் இருக்கவேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த கருத்தே மேனகாகாந்தி வழக்கில் பிரதான தீர்ப்பாக அமைந்தது.

தொடரும்

Back to top button