எச்சரிக்கை: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம! இதை ஒரு முறை குடுத்துவிட்டால் உங்கள் ஜாதகமே அவங்க கையில்!
கிராஸ் என்பவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர் ஆவார். தற்பொழுது இவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். ஐ போன் உபயோகம் செய்பவர்களை எச்சரித்து தான் கூறியுள்ளார். ஐ போனில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உபயோகம் செய்யும் பொழுது அதனுடைய சொந்த பிரவுசரை உபயோகம் செய்யாமல் தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்குள்ள பிரவுசர் மூலம் மக்கள் உபயோகம் செய்யும் வகையில் உள்ளது.
இது பெரும்பான்மையான பிரச்சனையாக இல்லாவிட்டாலும், நான் அடைவில் இது பெரிய பிரச்சனையாக வந்து சேரும். அந்த வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றை உபயோகம் செய்யும் பொழுது நாம் உபயோகம் செய்யும் கடவுச் சொற்களை அனைத்தும் வேறொருவர் எளிதாக கண்காணிக்க முடியும். குறிப்பாக பயனாளர்களின் அனுமதியின்றி இதனை செய்யலாம்.
இது எவ்வாறு செய்யப்படுகிறது என்றால், நாம் விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கும் போதெல்லாம் வளைத்தளத்தில் பயன்படுத்தப்படும் பிரவுசர் மூலம் மெட்டா அமைப்பு பல தகவல்களை எடுத்து வருகிறது.இதன்மூலம் நாம் செலுத்தப்படும் கடவுச்சொற்கள் முதல் கிரெடிட் கார்டு ,டெபிட் கார்டு எண் வரை தெரிந்து கொள்ளலாம் என கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர் கிராஸ் கூறுகிறார்.
அனைவருக்கும் பதிலளிக்கும் வகையில் மெட்டா கூறுவது, இது போல தகவல்களை எடுப்பது அவர்கள் உபயோகிக்கும் விளம்பரத்தை பேஸ்புக்கை முன்னணியாக கொண்டு பயன்படுத்துவதற்கு உபயோகிப்பது என கூறியுள்ளனர்.அதேபோல இந்த மென்பொருள் ஆராய்ச்சியாளர் பார்வையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இன் ஆப் பிரவுசர்கள் ஆட்டோ பில் எனப்படும் முறையை முன் வைத்துள்ளனர்.ஆட்டோ பில் என்றால்,பயனாளிகள் அனுமதியோடு தங்களின் சொந்த விவரங்களை அளிப்பது ஆகும்.
மக்களே தாங்கள் உபயோகிப்பதை கண்காணிக்க அனுமதி அளிப்பதற்கு சமம் என்று கூறலாம்.தனது சொந்த பயன்பாட்டிலும் இந்த முறையை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார். தற்பொழுது வெளிவந்த ஐபோன்களில் மெட்டா மூலம் ட்ராக் செய்யப்படும் பிரவுசர்களை பயனாளிகளுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய முறையை கொண்டு வந்துள்ளனர்.
பயானிகள் உபயோகம் செய்வதை கண்காணிக்க வேண்டும் என்றால் பயனாளிகளின் அனுமதி கட்டாயம் தேவை. ஐ போன் எடுத்த இந்த சிறிய நடவடிக்கையால் மெட்டாவிற்கு பல மில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இது மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் வர வேண்டும். அப்பொழுதுதான் டேட்டாக்கள் திருடப்படாமல் இருக்கும்.