விபச்சார விடுதி சுற்றிவளைப்பில் 5 இளம்பெண்கள் கைது
காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட சந்தேகநபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலியில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவர் இந்த விபச்சார விடுதியை நிர்வகித்து வந்ததாகவும், மேலும் நான்கு பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெனேகம வில்லிம்புல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண், ஹோமாகம, பிடிபன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண், தெஹியத்தகண்டியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் மற்றும் தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை இன்று சனிக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.