மாணவிக்கு நடன ஆசிரியர் அனுப்பிய ஆபாச வாட்ஸ்அப் மெசேஜ்கள்
வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நடன ஆசிரியர் பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவிக்கு நடன ஆசிரியர் ஒருவர் வட்ஸ்அப் செய்திகளை தொடர்ந்து அனுப்பிய சம்பவம் குறித்து ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், விசாரணை செய்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது.
தவறு செய்ய தூண்டும் நோக்கில் மாணவிக்கு ஆசிரியர் தொடர்ச்சியாக வட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் அனுப்பிய செய்திகளின் ஸ்கிரீன் ஷொட்களை மாணவி தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவியின் தாய் இது தொடர்பில் பாடசாலை அதிபர் தனது மகளை அலுவலகத்திற்கு வரவழைத்து பலர் முன்னிலையில் பல்வேறு கேள்விகளை கேட்டதாக தெரிவித்துள்ளார்.