இலங்கை அதிகாரிகளுடன் பேச தயார் – இலங்கை பத்திரதாரர் குழு
இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு (“The Ad Hoc Group of Sri Lanka Bondholders (the “Bondholder Group”) சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை அதிகாரிகளுடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதில் IMF திட்ட இலக்குகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போகின்றன.
தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் தங்கள் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தியா சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பிய கடிதத்தில் செய்துள்ள முக்கியமான வாக்குறுதியை அங்கீகரித்து, இலங்கை அதிகாரிகள் கோரப்பட்ட கடன் நிவாரணம் தொடர்பான ஒப்பீட்டு கோட்பாட்டைப் பயன்படுத்துவார்கள் மற்றும் எஞ்சியிருக்கும் அனைத்து உத்தியோகபூர்வ இருதரப்பு கடன்தாரர்களிடமிருந்தும் பெறுவார்கள் என்று இலங்கை பத்திரதாரர்களின் குழு தெரிவித்துள்ளது.