
பளை விபத்தில் ஒருவர் பலி
பளையில் பேருந்து விபத்திற்குள்ளானதில் மூதாட்டியொருவர் உயிரிழந்தார்.
திருகோணமலையிலிருந்து பருத்தித்துறை வந்த இலங்கை போக்குவரத்துசபை பேருந்து பளையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் மூதாட்டியொருவர் உயிரிழந்தார்.
இதில் 15 பேர் அளவில் காயமடைந்துள்ளனர்.
இரண்டு பேருந்துகள் வேகமாக பயணித்து வந்த நிலையில், பளை முள்ளியடியில் வீதியோர கல்லில் மோதி, பேருந்து கவிழ்ந்து சிறிது தூரம் இழுபட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.