பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை!
இலங்கையின் பணவீக்கம் 60.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான 12 மாதங்களில் இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருட பண அச்சிடும் நடவடிக்கையின் பின்னர் நாணயத்தின் வீழ்ச்சிக் காரணமாகவே இந்த பணவீக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (CPI, 2013=100) வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், ஜூன் 2022 இல் 54.6 சதவீதத்திலிருந்து 2022 ஜூலையில் 60.8 சதவீதமாக அதிகரித்தது.
வருடாந்திர புள்ளி பணவீக்கத்தில் இந்த அதிகரிப்பு உணவு மற்றும் உணவு அல்லாத வகைகளில் பொருட்களின் விலைகளில் மாதாந்திர அதிகரிப்பு காரணமாக இருந்தது. இதேவேளை 12 மாதங்களில் உணவுக் குறியீடு 90.9 சதவீதமாக இருந்தது.
அதன்படி, ஜூன் 2022 இல் 80.1 சதவீதமாக இருந்த உணவுப் பிரிவில் ஆண்டுப் புள்ளி பணவீக்கம் ஜூலை 2022 இல் 90.9 சதவீதமாகவும், ஜூன் 2022 இல் 42.4 சதவீதத்திலிருந்து 2022 ஜூலையில் 46.5 சதவீதமாகவும் அதிகரித்தது.
2015 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட நாணய நெருக்கடியின் வெளியீட்டு இடைவெளியை நிரப்புவதற்காக கடந்த இரண்டு வருடங்களாக இலங்கையின் மத்திய வங்கி பணத்தை அச்சிட்டுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்க டொலர் 200ல் இருந்து 360 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை பணவீக்கம் 75 சதவீதமாக உயரக்கூடும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.