ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய போறீங்களா? இந்த தவறை செய்தால் கரண்ட் பில் அதிகமாகுமாம்
ஸ்மார்ட்போனை நீங்கள் சார்ஜ் செய்யும் போது சில தவறுகளை செய்வதால், வீட்டில் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று பெரும்பாலான நபர்களின் கைகளில் மிகவும் அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்த பின்பு பலரும் இந்த தவறுகளை செய்வார்கள்.
போனை சார்ஜ் செய்த பின்பு சார்ஜரை சுவிட்ச் போர்டில் இருந்து இணைத்து வைக்கக்கூடாது. அதனை எடுத்துவிட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் நமக்கு தீங்கு விளைவிக்கும்.
பயன்பாட்டிற்கு பின்பு சார்ஜரை ஆஃப் செய்யாமல் விட்டுவிடுவது தவறாகும். இவை மின்கட்டணம் அதிகரிப்பதுடன், அவை வெடிப்பதற்கான அபாயமும் உள்ளது.
மேலும் சார்ஜர் இணைக்கப்பட்டே இருந்தால், அது அதிகமாக சேதமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அடாப்ட்ரை சூடாக்கி, திடீரென வெடிக்கவும் செய்யும்.
எனவே, நீங்கள் பல விஷயங்களை கவனித்துக் கொள்வது முக்கியம். சில நேரங்களில் செய்யும் சிறிய தவறுகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடுகின்றது.