fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

விமான பயணிகளுக்கு நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

விமான துறை சார்ந்த நிபுணர்கள் இனி பாதுகாப்பான விமான பயணம் என்பது அரிதானது எனவும் விமானங்கள் குலுங்கும் வாய்ப்புகள் அதிகம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், விமான பயணங்களின் போது விமானிகளின் அறிவுரைகளை மதிக்க வேண்டும் என்றும் பயணிகளுக்கு சீட் பெல்ட்(Seat belt) அணிய வேண்டியது கட்டாயம் என்பதையும், நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக விமான பயணம் என்பது பாதுகாப்பானதாக அமையுமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.இந்நிலையில், விமானிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத பயணிகளே விமானம் குலுங்கும் போது பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்ற கருத்தையும் விமான ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.

கடந்த மே 21ஆம் திகதி 211 பயணிகளுடன் லண்டனில்(London) இருந்து சிங்கப்பூருக்கு(Singapore) புறப்பட்ட விமானம் பர்மா(Myanmar) மீது பறந்த நிலையில், குலுங்கியது.

இந்த சம்பவத்தில், பலர் காயங்களுடன் தப்பிய நிலையில், 73 வயதான பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 நாட்களுக்கு பின்னர் தோஹாவில்(Doha) இருந்து டப்ளினுக்கு(Dublin) கத்தார் ஏர்வேஸ்(Qatar Airways) விமானத்தில் பயணம் செய்த 12 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்தே, இனி விமானங்கள் குலுங்குவது அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், காலநிலை மாற்றம் இதற்கு காரணமா என்றும் விவாதிக்கப்படுகிறது.

2009 முதல் 2018 வரையில் விமானம் குலுங்கியதால் 111 பேர்கள் படுகாயமடைந்துள்ளனர். மேலும், 2023ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், கடந்த நான்கு தசாப்தங்களில் வட அட்லாண்டிக் விமான வழித்தடத்தில் இதுபோன்ற விமானம் குலுங்கும் சம்பவங்கள் 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் போன்ற பரபரப்பான விமானப் பாதைகளும் இது போன்ற சிக்கலை சந்திப்பதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், எந்த வழித்தடத்தில் எப்போது இது போன்ற விமானம் குலுங்கும் சம்பவங்கள் நிகழும் என்பதை கணிப்பது சவாலாவாலுக்குறிய விடயம் என்றும் பயணிகள் கட்டாயம் சீட் பெல்ட்(Seat belt) அணிய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.  

Back to top button