லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் பற்றிய விசேட அறிவிப்பு
மாதாந்த சமையல் எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம், இம்முறை விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாதாந்த விலை சூத்திரத்தின்படி எதிர்வரும் 4ம் திகதி புதிய விலை அறிவிக்கப்படும்.கடந்த மாதம் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.அதன்படி, அதன் புதிய விலை 3,127 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,256 ரூபாவாகும்.2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 587 ரூபாவாகும்.
எவ்வாறாயினும், கடந்த மாதம் எரிவாயு விலை சூத்திரத்தின்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,045 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாத வகையில் 145 ரூபாவால் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.மேலும், 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, 12.5 கிலோ கிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3,835 ரூபாவாகும்.5 கிலோ எடை கொண்ட லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.59 உயர்ந்து புதிய விலை ரூ.1,535.