லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை சூத்திரத்தின்படி இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (04) இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது.அதேவேளை நாட்டில் நேற்றிரவுமுதல் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பேருந்து கட்டணங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.