fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான பலர் கைது

யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட 22 பேரில் 19 பேர் ஹெரோயின் பாவனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இது, போதைவஸ்து, குடாநாட்டில் எவ்வளவு தீவிரமான பிரச்சினையாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

17 முதல் 31 வயதுக்குட்பட்ட தொழிலில்லாத ஆண்கள், போதைப்பொருள் வைத்திருந்ததாகவும், பயன்படுத்தியதாகவும் சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நேற்று விசாரணைக்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன் பின்னரே மருத்துவ பரிசோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் இது வழக்கத்திற்கு மாறாக வகையில், ஒரே நாளில் அதிகளவானோர் போதைக்கு அடிமையான அதிகளவானோர் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி திணைக்கள அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஐந்து பேர் சிறையிலிருந்து வந்தவர்கள். மற்றவர்கள் சுன்னாகம் பொலிஸ் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள். சோதனையின்போது 3 பேருக்கு எதிர்மறை முடிவு காட்டப்பட்டாலும் அவர்களும் நீண்டகால போதைவஸ்து பாவனையாளர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருந்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பொருளாதார நெருக்கடி, வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றுடன் இணைந்த உலகளாவிய தொற்றுநோய் போதைப்பொருள் பாவனையின் வியத்தகு அதிகரிப்புக்கு காரணம் என்று யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கே.மகேசன குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடத்தும் ஒரு வலுவான மாஃபியா செயற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மட்டும் போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Back to top button