யாழ்ப்பாணத்தில் பாண் நுகர்வில் வீழ்ச்சி
யாழ்ப்பாண மக்கள் பாண் உண்பதை குறைத்துள்ளமையினால் மாகாணத்தில் பாண் விற்பனை சுமார் அறுபது வீதத்தால் குறைந்துள்ளதாக யாழ் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையேற்றம் காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள விவசாயிகள் அரிசி மற்றும் தானிய உணவு உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளனர்.
எனவே அவர்கள் பாண் மற்றும் தொடர்புடைய பேக்கரி பொருட்களை வாங்குவதைக் குறைத்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள ஏழு பிரதான பேக்கரிகளை அண்மையில் மூடுவதற்கு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.