யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி மீது முன்னாள் காதலன் பாலியல் துஸ்பிரயோகம்
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மாணவியும் , அவரது சகோதரியும் தனியார் கல்வி நிலைய வகுப்புக்களை முடித்துக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் மாணவியை வழிமறித்து அருகில் இருந்த கட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளார். இதேவேளை குறித்த பகுதியில் இருந்து தப்பித்த மாணவியின் சகோதரி உறவினர்கள் , அயலவர்களை குறித்த பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
இதனையடுத்து இளைஞன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் துஸ்பிரயோகம் செய்த இளைஞன் தலைமறைவாகியுள்ளார்.
அதேவேளை பாதிக்கப்பட்ட மாணவியும் , இளைஞனும் காதல் தொடர்பினை கொண்டிருந்த நிலையில் இளைஞன் போதைக்கு அடிமையானதால் , மாணவி காதல் தொடர்பினை துண்டித்ததாக கூறப்படுகின்றது.