யாழ்ப்பாணத்தில் பல்கலைகழக மாணவன் தவறான முடிவெடுத்து மரணம்
யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழக மாணவர் ஒருவர் வீடியோ கேமுக்கு அடிமையாகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வமாக இருந்து வந்த நிலையில் (15) வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…
கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவனான புஸ்பராஜா எழில்நாத் (வயது-22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாய் – தந்தையருக்கு ஒரே மகனான இவர் இன்றயை தினம் வீட்டில் யாரும் இல்லாது தனிமையில் இருந்த போது இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் வண்ணார்பண்ணை – யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் இன்று (15) மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் மொபைல் வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையான நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் தற்கொலைக்காண காரணம் சந்தேகமாக இருப்பதாகவே தெரியவருகின்றது.
இதையடுத்து சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதரைனக்காக உத்தரவிட்டார்.
இதையடுத்து குறித்த இளைஞனின் சடலம் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மொபைல் வீடியோ கேம் விளையாட்டு ஏற்படுத்திய மன விரக்தியால் பல்கலைக் கழக மாணவர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.