
யாழ்ப்பாணத்தில் சகோதரியை கர்ப்பமாக்கியவர் கைது
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தங்கை கர்ப்பமான சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அண்ணன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, நேற்று சனிக்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் அவரது தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று கருவை கலைக்க முற்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு வைத்தியசாலை பொலிஸாரினால் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் தங்கை கர்ப்பம் அடைந்ததற்கும் தனக்கும் தொடர்பில்லை என , சந்தேக நபர் தெரிவித்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.