
யாழ்ப்பாணத்தில் இளம் ஆசிரியை தற்கொலை!
யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் காதலன் கண்டித்ததால் காதலி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 24 வயதுடைய சிவகுமாரன் நிருத்திகா என்ற ஆசிரியையே நேற்று உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆசிரியை தனது காதலனுக்கு தெரியாமல் நண்பி ஒருவரின் திருமண வீட்டுக்கு சென்றுள்ளார். காதலன் பல தடவை தொலைபேசி அழைப்பை எடுத்து இருந்த போதும் அவர் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை. பின்னர் குறித்த ஆசிரியை திருமண வீட்டிற்கு சென்ற சம்பவத்தினை தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலன் ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் மன விரக்தி அடைந்த ஆசிரியை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது சிறப்பு விசாரணை போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.



