மெஸ்ஸியின் கனவு நனவானது! உலகக்கோப்பையை வென்று அசத்தியது அர்ஜென்டினா!
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது அர்ஜென்டினா.
கத்தார் நாட்டின் தோஹா வில் ஃபிஃபா உலக கால்பந்து திருவிழா நடைபெற்றது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று, 2- வது சுற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டிகள் உள்ளன.
போட்டிகள் இறுதியை நெருங்கிய நிலையில் அரையிறுதியில் தோற்காத அணி என்ற பெருமையைப் பெற்ற அர்ஜென்டினா குரோசியாவை துரத்தியும், நடப்பு சாம்பியன் அணியான பிரான்ஸ் மொராக்கோ அணியையும் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தன.
இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று (18-12-2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தரவரிசையில் 3- வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா 4- வது இடத்தில் இருக்கும் பிரான்ஸை சந்தித்தது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என்பதால் இன்றைய ஆட்டகளம் அனல் களமாக மாறியது.
மெஸ்ஸிக்கு இதுவே கடைசி போட்டி என்பதால் உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் அவரின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தனர். அவரும் அவர்களை ஏமாற்றாமல் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் தனது முதல் கோலை பதிவு செய்து ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
அடுத்து மரியா ஒரு கோலை அடிக்க 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது அர்ஜென்டினா. அடுத்து நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று ஆட்டத்தின் 81, 82 நிமிடங்களில் கோல் அடித்து 2-2 என்று சமன் செய்தது பிரான்ஸ். இரு அணிகளும் சமநிலை பெற்றதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் தலா ஒரு கோல் அடித்தன.
அடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டு 4- 2 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷுட் அவுட்டில் கோப்பையை தட்டிச் சென்றது அர்ஜென்டினா. இதன் மூலம் மெஸ்ஸியின் உலகக்கோப்பை கனவு நனவானது.
உலகமே எதிர்பார்த்த கால்பந்து இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது அர்ஜென்டினா.
மெய்ப்பித்தார் மெஸ்ஸி.
இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் மொத்தம் 7 கோல்கள் அடித்துள்ளார் மெஸ்ஸி.
2006 -ஆம் ஆண்டு தனது கால்பந்து பயணத்தை தொடங்கிய மெஸ்ஸி
37 -க்கும் மேற்பட்ட கோப்பைகளை வென்றும் அவரது உலகக்கோப்பை மட்டும் கனவாக இருந்தது. தற்போது அது நனவானது.
இந்த வெற்றி மூலம் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது அர்ஜென்டினா. 1978-ஆம் ஆண்டு டேனியல் பசரெல்லா தலைமையிலும், 1986 – ஆம் ஆண்டு டியாகோ மாரடோனா தலைமையிலும் கோப்பையை வென்று இருந்தது அர்ஜென்டினா. தற்போது மீண்டும் 36 வருடங்களுக்கு பின்னர் கோப்பையை வென்று அசத்தியது.
அர்ஜென்டினா – வின் இந்த வெற்றியை உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.